தங்கம் விலை தாண்டவம்.. நேற்று வீழ்ச்சி, இன்று உயர்வு! ஒரு நாளில் சவரன் ரூ.680 அதிகரிப்பு!
சென்னை: நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், இன்று விலை லேசான உயர்வை கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனையாகிறது.
உலகம் முழுவதும் தங்கத்திற்காக பெரும் டிமாண்ட் இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. தங்கம் வைத்திருப்பது செல்வத்தின் அடையாளமாக இருந்தாலும், அது எவ்வளவு வைத்திருக்கிறோம், எந்த வடிவத்தில் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து இந்திய சமூகத்தில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கான கௌரவம் கூடுகிறது. இந்திய சமூகத்தின் நடுத்தர குடும்பங்களில் தங்கத்திற்கு என தனி இடம் இருக்கிறது.

பெண் பிள்ளை பிறந்தால், அக்குழந்தை பருவம் எய்துவது தொடங்கி திருமணம், வளைகாப்பு வரை தங்க நகையை அணிவித்து வளர்க்கப்படுகிறது. அதிலும் திருமணம் என்று வந்துவிட்டால், பெண் வீட்டார் எவ்வளவு தங்க நகைகளை போடுகிறார் என்பதை பொருத்தே அவர்களுக்கான மதிப்பு கொடுக்கப்படுகிறது. எனவே தங்கம் இந்தியாவை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமான இடத்தில் இருக்கிறது. இதனால் தங்கத்தை சேர்க்க ஏறத்தாழ அனைத்து இந்தியர்களும் விரும்புகிறார்கள்.
இந்த நுகர்வு, தங்கத்திற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை மாற்றியிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 700-900 டன் வரை தங்கம் விற்பனையாகிறது என புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022-2023ம் ஆண்டில் மட்டும் 850 டன் அளவுக்கு தங்கம் விற்பனையாகியிருக்கிறது. அதிலும் தீபாவளி, அட்சய திருதியை உள்ளிட்ட நாட்களில் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே இந்தியாவில் தங்கத்திற்கு என எப்போதும் தனி டிமாண்ட் இருக்கிறது.
ஆனால் சாமானிய மக்களால் தங்கத்தை அவ்வளவு எளியதாக வாங்கிவிட முடிவதில்லை. ஏனெனில் கடந்த பல பத்தாண்டுகளாக தங்கத்தின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மறுபுறம் மக்களின் ஊதியம், வருமானம் பெரியதாக வளரவில்லை. இது தங்கம் விற்பனைக்கும், அதை வாங்கும் மக்களும் இடையேயான இடைவெளியை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இதில் எதிர்பாரத விதமாக ட்ரம்ப் ஆட்சியை பிடித்தார். இந்த பின்னணியில் தங்கம் விலை திடீரென நேற்று சவரணுக்கு ரூ.1320 குறைந்தது. இதனையடுத்து இன்று ரூ.680 அதிகரித்து ரூ.58,280-க்கு விற்பனையாகிறது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications