Gold Rate Today: மீண்டும் சவரன் ரூ 57 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! சென்னையில் விலை எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் கடந்த 4 தினங்களில் சவரனுக்கு ரூ 1680 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
சென்னையில் நவம்பர் 21-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,145 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 20 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 56,920 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,115 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 19 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 56,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,065 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,995 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினம் மார்க்கெட் விடுமுறை. இதனால் நேற்று தங்கத்தின் விலை கூடவும் இல்லை, குறையவும் இல்லை. முந்தைய நாள் விலையே நீடித்தது. வெள்ளியின் விலையும் அப்படித்தான். நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ 55,480க்கும் வெள்ளியின் விலை கிராம் ரூ 99 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 16 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 15 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,560 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,945 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது தங்கம் விலை ரூ 56 ஆயிரத்திற்கு கீழும் வெள்ளியின் விலை ரூ 100க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்தது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்பட்டது.அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 13-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,680 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 135 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,085 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்தது. இன்று ரூ 320 சரிவை அடுத்து மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 1840 குறைந்தது.
அது போல் கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.
ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
-
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications