Gold Rate Today: 2 நாளா விண்ணை நோக்கிய தங்கம் விலை! சென்னையில் இன்று நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.12) எந்த மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 640 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் டிசம்பர் 11 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 103-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,03,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 10 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 75 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,205-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 104-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 9 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,040 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 15 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 8-ஆம் தேதி மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு சவரன் ரூ 56,920-க்கும் ஒரு கிராம் ரூ 7115 -க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 7ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கூடுமோ குறையுமோ என எதிர்பார்த்திருந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்தது. இதனால் ஒரு சவரன் ரூ 56,920-க்கும் ஒரு கிராம் ரூ 7115 -க்கும் விற்பனையானது. அதே வேளையில் வெள்ளியின் விலையில் ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கும் ஒரு கிலோ ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,920 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,115-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 5 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,120 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 4-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் டிசம்பர் 3ஆம் தேதி விற்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications