Gold Rate Today: சன்டே அதுவுமா நகைக் கடைக்கு போக பிளானா? சென்னையில் ஒரு பவுன் என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று (டிச.15) என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நகைக் கடைகளுக்கு செல்லலாம்.

சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி சவரனுக்கு ரூ 640 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

gold rate gold price

சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 720 குறைந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,120 -க்கும் கிராமுக்கு ரூ 90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7,140 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை டிசம்பர் 13 ஆம் தேதி ஒரு சவரனுக்கு 440 குறைந்து ரூ 57,840-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ 55 குறைந்திருந்தது.

சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி சவரனுக்கு ரூ 640 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் டிசம்பர் 11 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 103-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,03,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் டிசம்பர் 10 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 75 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,205-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 104-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+