Gold Rate Today: புத்தாண்டு அன்றே உயர்ந்த தங்கம் விலை! சென்னையில் இன்று சவரன் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.5) சவரன் ரூ 57,720-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக விலையுயர்ந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஜனவரி 5 ஆம் தேதியான இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்று விற்கப்பட்ட விலைக்கே தங்கம் இன்று விற்பனை செய்யப்படும். அதன்படி ஒரு சவரன் ரூ 57,720-க்கும், ஒரு கிராம் ரூ 7215-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் ஒரு கிராம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold price

சென்னையில் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் சவரனுக்கு ரூ 360 குறைந்தது. இதனால் சவரன் ரூ 57,720-க்கும், ஒரு கிராமுக்கு ரூ 45 குறைந்து ஒரு கிராம் ரூ 7215-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம், ரூ 7260-க்கும், சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 58,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஜனவரி 2ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,400க்கும் விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக சவரனுக்கு ரூ 1040 உயர்ந்தது.

சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி ஆண்டின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்தது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. இதனால் சவரன் 57,200 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7150-க்கும் விற்பனையானது.

டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+