தங்கம் விலை இன்று குறைந்தது.. நகை பிரியர்களே சென்னையில் என்ன விலை தெரியுமா?
சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு 1320 ரூபாய் வரை சரிந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.680 உயர்ந்தது. இதனால் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்து. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் 50 ஆயிரம் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல உயர்ந்து, கடந்த மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தொட்டது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைந்ததன் காரணமாக விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை, திடீரென ரூ.57 ஆயிரம் ஆக அதிகரித்தது.

இதனிடையே இஸ்ரேல்- ஈரான் நாடுகளில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் கடந்த மாதம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சம் பெற்றது. கடந்த அக்டோபர் 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. கடந்த அக்டாபர் 28ம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 315-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 520-க் கும் விற்பனை ஆனது.
அக்டோபர் 30ம் தேதி அன்று , கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 375-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை அன்று அடைந்தது. அதற்கு அடுத்த நாள் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் பிறந்த போது, தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தங்கம் விலை அதிரடியாக சரிய தொடங்கியது. சென்னையில் ஆபரண தங்கம் விலை நவம்பர் 1ம் தேதி அன்று ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையானது. இந்நிலையில் நவம்பர் 2, நவம்பர் 3, நவம்பர் 4ம் தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 7370 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் 58,960 ரூபாய் ஆகவும் இருந்தது. நவம்பர் 5ம் தேதியான நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் 7355 ரூபாய் ஆக சரிந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் 58,840 ரூபாய் ஆக குறைந்தது. ஆனால் நேற்று (நவம்பர் 6ம் தேதி) தங்கம் விலை சற்று கூடியது. இதன்படி ஒரு கிராம் தங்கம் 7,365 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.58,920 ஆகவும் விற்பனை ஆனது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளியானது. இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் காரணமாக பல பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீட்டை எடுத்து டாலரில் முதலீடு செய்தனர். இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. அடுத்ததாக தற்போது தங்கம் விலையும் சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த நவம்பர் 7ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்தது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பபட்டது. இந்த விலை குறைவால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் 'கிடுகிடு'வென உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆன தங்கம் விலை, நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையாகிறது
இதனிடையே தங்க நகை வியாபாரிகள் கூறும் போது, தங்கத்தின் மீது பலர் பங்குச்சந்தையில் இருந்து முதலீடு செய்ததன் விளைவாக அதன் விலை நேற்று அதிகரித்திருக்கிறது. இனிவரும் நாட்களிலும், ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications