Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ஒரே நாளில் ரூ.776 அதிகரிப்பு! வரப்போகும் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாக்டவுனால் உச்சத்தில் இருந்த தங்கத்தின விலை அண்மைக்காலமாக பெரிய அளவில் குறைந்து வந்தது. இந்த சூழலில் தங்க நகைகள் விலை இன்று கிடுகிடுவென சரசரவென உயர்ந்திருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு அபரிதமாக உயரப்போகிறது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: தாறுமாறு… இன்று தங்கம் ரேட்டு பாரு.. சவரனுக்கு ரூ.776 உயர்வு.. பெண்கள் ஷாக்..!

    தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 அதிகரித்து ரூ.37,864-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,733க்கு சென்னையில் விற்பனையாகிறது.

    தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வந்தது குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது.

    பொருளாதாரம் சரிவு

    பொருளாதாரம் சரிவு

    தங்கம் விலை கடந்த 2019 ஜனவரியில் இருந்ததுடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிட்டால் அப்படியே அதன் விலை டபுள் ஆகியது. இதற்கு முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா ஆகியவற்றால் இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.

     ரூ.43,328க்கு விற்பனை

    ரூ.43,328க்கு விற்பனை

    தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் இந்தியாவில் ஒரு நாளில் விற்கப்பட்ட அதிகப்பட்ச விலையாகும்.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    எவ்வளவு ஏற்ற இறக்கம்

    எவ்வளவு ஏற்ற இறக்கம்

    அதாவது 22 கேரட் தங்க நகை விலை ரூபாய் 7 ஆயிரம் வரை குறைந்தது.. கடந்த நவம்பர் 30ம் தேதி 36152 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு டிசம்பர் 1ல் 36208க்கு விற்பனையானது. ஆனால் டிசம்பர் 2ம் தேதி 36208 ரூபாயில் இருந்து 36888 ஆக உயர்ந்தது. டிசம்பர் 3ம் தேதி ரூ.37248 ஆக உயர்ந்தது. ஆனால் டிசம்பர் 4ம் தேதி சற்று குறைந்து 37200 க்கு விற்பனையானது. டிசம்பர் 5ம் தேதி 37216, டிசம்பர் 6ம் தேதி 37216க்கு விற்பனையானது.

    சென்னை தங்கம் விலை

    சென்னை தங்கம் விலை

    இந்நிலையில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று(டிசம்பர் 7ம் தேதி) 4636 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்து 88 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.776 அதிகரித்து தற்போது ரூ.37864க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 97 ரூபாய் உயர்ந்து 4733 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     அபரிமிதமாக உயரும்

    அபரிமிதமாக உயரும்

    தங்கம் விலை சரசரவன சரிந்து இருந்த நிலையில் திடீரென இந்த அளவுக்கு உயர என்ன காரணம் என்பது குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், எப்படி தங்கம் விலை குறைந்ததோ, அதேபோல் தங்கம் விலை உச்சம் பெறும். இந்த மாத இறுதியில் புதிய உச்சம் தொடும். 2021 மார்ச்சில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயரும். ஏனெனில் தங்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் முதலீடுகள் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பும் சிறிதளவு சரிந்துள்ளது. உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். அடுத்து வரும்காலங்களில் தங்கம் விலைஇன்னும் அபரிமிதமாகவே உயரும்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+