Gold Rate Today: நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புத்தாண்டு.. இன்றும் தங்கம் விலை உயர்வு!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 2) சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 57,440-க்கு விற்பனையாகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது.
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை பெருமளவில் உயரும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய மக்கள் விரும்புகிறார்கள். தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு தங்கம் வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வு
புத்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து, சவரன் ரூ 56,880-க்கு விற்பனையானது. முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7110-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ 2 குறைந்து கிராம் ரூ 98-க்கு விற்பனை செய்யப்பட்டது.
2வது நாளாக உயர்வு
நேற்று ஜனவரி 1 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 57,200-க்கு விற்பனையானது. முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜனவரி 2 ஆம் தேதி, ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,180க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூபாய் 57,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025ஆம் ஆண்டு தொடங்கி, நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை மாற்றம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார். அதன் காரணமாக ஒருசில நாட்களுக்கு தங்கம் விலை குறைந்து வந்தது.
அதன்பிறகு மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு தங்கம் விலை சில நாட்கள் கடுமையாக குறைந்து வந்தது. அதன் பிறகு மீண்டும் உயரத் தொடங்கி, வருட இறுதியில் சற்று விலை குறைந்திருந்தது. இந்நிலையில், புத்தாண்டில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
வெள்ளி விலை
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,930க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.47,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ரூபாய் 99க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூபாய் 98 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications