Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. 6 நாட்களில் சுமார் 3000 ரூபாய் உயர்ந்தது!
சென்னை: தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூபாய் 7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயர்வைக் கண்டுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தங்கத்தின் விலை இந்தியாவில் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 60 ஆயிரத்தை நெருங்கியது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தங்கம் விலை சரியத் தொடங்கியது. குறிப்பாக, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு தங்கம் விலை சரிவைக் கண்டது. 15 நாட்களில் 4200 ரூபாய் அளவிற்கு குறைந்தது.
இந்த விலைய குறைவு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், சில நாட்களே நீடித்த விலை சரிவு, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி சவரனுக்கு ரூ.480, அதற்கு அடுத்த நாள் (19 ஆம் தேதி) சவரனுக்கு ரூ.560 அதிகரித்தது. இதையடுத்து, 20 ஆம் தேதியும் தங்கம் ஒரு கிராம் ரூ.7065-க்கும், ஒரு பவுன் ரூ.56,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
21 ஆம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,115-க்கும், ஒரு சவரன் ரூ.56,920-க்கும் விற்பனை ஆனது. 22 ஆம் தேதி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கும் விற்பனையானது.
நேற்றும் தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,800-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று 6-வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 6 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயர்வைக் கண்டுள்ளது.கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் 55, 480 ரூபாய் என்ற விலையில் விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை ரூ.58,400 என விற்பனை ஆகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,805 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,440 எனவும் விற்பனையாகி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது என்று நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications