மளமளவென குறைந்த தங்கத்தின் விலை.. சென்னையில் இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் தங்கம் மீது மக்கள் அதிக மோகம் கொண்டுள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தயாராக உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

gold rate gold price

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தொடர்ந்து தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் உள்ளிட்டவற்றை பொறுத்து தங்கத்தின் விலை ஏறுமுகமானது. விரைவில் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தொடலாம் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் இன்று ஆபரண தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் தங்கத்தை போல் வெள்ளியின் விலை அதிகமான வீழ்ச்சியை இன்று சந்திக்கவில்லை. இதனால் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+