Gold Rate Today: தங்கம் விலைக்கு என்னதான் ஆச்சு? சப்தம் இல்லாம கிடக்குதே! பெருசா ஏதாவது நடக்குமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜனவரி 7ஆம் தேதி) எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இல்லை.

சென்னையில் ஜனவரி 7ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,720-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ 7215-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லாமல் கிராம் ரூ 99-க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ 99 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

gold rate gold price


சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்திருந்தது.

அதன் பின்னரும் 22 கேரட் தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்தது. அந்த வகையில் கடைசியாக கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் ரூ 57,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பின்னர் வாரத்தின் முதல் நாளாக நேற்று தங்கம் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாமல் அதே விலையிலேயே நீடித்தது.

சரி! நேற்றுத்தான் அப்படியென்றால்! வாரத்தின் இரண்டாம் நாளான இன்றாவது தங்கம் விலை கூடுமா, குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த 6 நாட்களாக 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:

  • 06.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
  • 05.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
  • 04.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
  • 03.01.2025- ஒரு சவரன் ரூ 58,080
  • 02.01.2025- ஒரு சவரன் ரூ 57,400
  • 01.01.2025- ஒரு சவரன் ரூ 57,200

டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+