அடேங்கப்பா.. 57 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இன்று ரூ. 200 அதிரடியாக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 7,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

gold rate gold chennai

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவது நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர், நகைப் பிரியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூபாய் 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அண்மையில், அதாவது கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை கடுமையான சரிவைக் கண்டது. தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 560 குறைந்து 56,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 70 குறைந்து, 7,030 க்கு விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகை காலத்தில் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டது நகை பிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாகன் உயர்ந்தது. தங்கம் விலை ஆயுத பூஜையான நேற்று அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து உள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 7,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+