"45% சரிவு.." தங்கம், வெள்ளி விலை.. சூப்பர் செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்! ஆஹா செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நிற்காமல் சரிந்து வருகிறது. மாறி வரும் புவிசார் அரசியலே இதற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தங்கம் விலை இன்னும் எந்தளவுக்குக் குறையும்.. வெள்ளி விலையும் சரியும் நிலையில், அது எப்படி இருக்கும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

சென்னையில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை தாறுமாறாகக் குறைந்துள்ளது.. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து குறைவது, அதை அதிகபட்ச விலையில் வாங்கியவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anand Srinivasan gold silver

ஆனந்த் சீனிவாசன்

அதேபோல தங்கத்திற்கு இணையாக உயர்ந்த வெள்ளியும் இப்போது அதை மிஞ்சும் அளவுக்கு வேகமாகவே சரிந்து வருகிறது. இதற்கிடையே தங்கமும், வெள்ளியும் இந்தளவுக்குக் குறைய என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் சரிந்து கொண்டே இருக்கிறது. ரூ. 11,500 வரை போன தங்கம், இப்போது சரிந்துவிட்டது.. 18 கேரட், 24 கேரட் தங்கமும் ரூ.50 இறங்கி இருக்கிறது. ஆனால், ரியல் ஆக்ஷன் தங்கத்தில் இல்லை.. ரியல் ஆக்சன் வெள்ளியில் தான் இருக்கிறது.. வெள்ளி விலை ரூ.169, ரூ.170 எனச் சொன்னாலும், அது நகைக்கடைக்காரர்கள் விற்கும் விலை தான்.

வெள்ளி விலை

நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் இருந்து வாங்கும் விலை ரூ.145ஆக தான் இருக்கிறது. ஏனென்றால் ஸ்பாட் வெள்ளியும் ப்யூச்சர்ஸ் வெள்ளியும் ஒரே ரேஞ்சில் இருக்கிறது. அப்படி என்றால் வெள்ளி விலை இன்னும் இறங்கும் என்றே ஃப்யூச்சர் மார்க்கெட் சொல்கிறது.. எனவே, இன்றைக்கு நீங்கள் வெள்ளியை விற்கப் போனால், கிலோவுக்கு ₹1,45,000 மேல் கிடைக்காது. ₹1,40,000 கிடைத்தாலே பெரிய விஷயம்..

அப்படியென்றால் ரூ. 208, ரூ.209க்கு வாங்கியவர்கள் நிலை எல்லாம் யோசித்துப் பாருங்கள். ரூ.209ல் இருந்து 45% சரிந்து இருக்கிறது. அதாவது இருந்து 45% விலை ஏறினால் தான் அது அதிகபட்ச விலையை அடையும். எனவே, வெள்ளி விலையேற்றம் ஓவர்!

தங்கம் விலை

தங்கம் விலையில் வாங்கி விற்பதில் இந்தளவுக்கு வித்தியாசம் இருக்காது. இப்போது சில நகைக் கடைகள் ஒரு புதிய விளம்பரத்தைப் போடுகிறார்கள். அதாவது உங்கள் தங்கத்திற்குக் கூடுதலாக ரூ.300 தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் பழைய தங்கத்தைக் கொடுத்துவிட்டு புதிய நகை வாங்கினால் தான் அந்தக் கூடுதல் ரூ.300 கொடுப்பார்களாம்.. பணமாகத் தர மாட்டார்கள்..

அதாவது செய்கூலி, சேதாரம் எல்லாம் 10 முதல் 15% வரை போடுவார்கள். அதில் தான் உங்களுக்கு ரூ.300 சலுகை தருகிறார்களோ தவிரப் பணமாக எல்லாம் ரூ.300 தரவில்லை. யாரும் அப்படிக் கொடுக்க மாட்டார்கள்.. அதாவது தங்கத்தில் வாங்கு விலைக்கும் விற்கும் விலைக்கும் அதிகபட்சம் 5% மட்டும் வித்தியாசம் வரும். வெள்ளியைப் போல 20% முதல் 25% வரை எல்லாம் வித்தியாசம் வராது. எனவே, வெள்ளியும் பிரஷரில் இருக்கிறது.

அடுத்து என்னவாகும்!

மேலும், தங்கம் ஒரு மானிட்டரி உலோகம். எனவே, அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் ஜெரோம் பவல் 0.25% வட்டி குறைப்பது தங்கத்திற்கு சப்போர்ட்டாக இருக்கும். டிசம்பரில் இன்னொரு முறையும் கூட 0.25% வட்டி குறைப்பது சப்போர்ட்டாக இருக்கும். தங்கம் விலை விலை 2026 இறுதிக்குள் 5000 டாலரை தாண்டும் எனப் பிரபல முதலீட்டு நிறுவனமான ஜேபி மார்கன் சொல்கிறது.

தங்கம் தாறுமாறாக ஏறியிருக்கிறது. இதனால் தானாக அதன் விலை குறைந்து வருகிறது. அதேநேரம் தங்கம் விலை மிகப் பெரியளவில் சரியுமா என்றால் சரியாது. தங்கம் விலை இந்தியாவில் அதிகபட்சம் 10% மட்டுமே குறையும். ரூ.12500இல் இருந்து 10500 ரூபாய் வரை வரலாம். அல்லது 10000 வரலாமே.. தவிர அதுக்கு கீழ் போவது ரொம்ப கஷ்டம். அதிகபட்சம் ரூ.9500.. அதுதான் லிமிட்!" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+