தங்கம் ஏறுதேனு கவலை வேண்டாம்.. சீக்கிரமே சரியும்! மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருக்கும் சூழலில், இதனால் மக்கள் ரொம்பவே குழப்பமடைந்துள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும்.. இது குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்குச் சுமார் ரூ.320 அதிகரித்திருந்தது. இருப்பினும் நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.175 குறைந்தது. இப்படித் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருப்பதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Anand Srinivasan gold personal finance

தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் புயல் வேகத்தில் பறக்கத் தொடங்குமா அல்லது குறையுமா என்பதே மக்களுக்கு இருக்கும் சந்தேகம். இதற்கிடையே தங்கம் விலை இன்னும் எத்தனை காலம் இதேபோல இருக்கும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ஏற்றம் இறக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் ஏறினால் மறுநாள் இறங்குகிறது.. அதேபோல வெள்ளியிலும் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியில், நீங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் கிலோவுக்கு சுமார் ₹30,000 கேப் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த ரூ.30,000 ஓகே என்றால் வெள்ளி வாங்கலாம். அதாவது கிராமுக்கு ரூ.180க்கு வாங்கினால்.. ரூ.150க்கு தான் விற்க முடியும்.

அதே வெள்ளியை நகை அல்லது பொருளாக வாங்கினால் செய்கூலியும் கூடுதலாக 10% போய்விடும். அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வெள்ளியைப் பார் போல வாங்கினால் ரூ.30,000 இழப்பு. பொருளாக வாங்கினால் அத்தோடு 10% கூடுதலாக இழக்க வேண்டி இருக்கும் எனச் சொல்கிறார்கள்.

அமெரிக்கா

அமெரிக்க செலவின மசோதாவில் டிரம்ப் கையெழுத்து போட்டிருந்தார். இதன் மூலம் அமெரிக்க ஷட் டவுன் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல பெடரல் ரிசர்வில் இருந்த மற்றொரு அட்லாண்டா கவர்னர் ராஜினாமா செய்துவிட்டார். அந்த அட்லாண்டா பிரிவில் இருந்தே ஒருவரைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். அவர்களை பெடரல் வங்கி ஓகே செய்யும். இந்தப் பதவியில் இருப்பவரை டிரம்ப்பால் நியமிக்க முடியாது. இவர் பிப்ரவரி மாதம் தான் போவாராம். அதன் பிறகு இவருக்குப் பதிலாக இன்னொருவர் வருவார்.

அதைத் தொடர்ந்து மே மாதம் இப்போது அமெரிக்க பெடரல் வங்கி கவர்னராக இருக்கும் ஜெரோம் பவுலுக்கு பதிலாக வேறு ஒரு நபரை டிரம்ப் நியமிப்பார். இதனால் பெடரல் வங்கியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அமெரிக்க வங்கி கூட்டம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தங்கம் விலை, வெள்ளி விலை இருக்கும்.

டிஜிட்டல் தங்கம்

அதேபோல கடந்த வாரம் டிஜிட்டல் தங்கம் தொடர்பாகச் செபி முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் புதிய பின்டெக் நிறுவனங்களில் யாரெல்லாம் டிஜிட்டல் தங்கத்தைப் போட்டார்களோ.. அவர்கள் எல்லாம் தங்கத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் எந்த நிறுவனத்தால் தங்கத்தைக் கொடுக்க முடியும்.. யாரால் கொடுக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

சரியும்

நான் மீண்டும் சொல்கிறேன்.. தங்கம் விலை ஏறி இறங்கும். வெள்ளி விலையும் ஏறி இறங்கும். எப்போதும் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலையை விட ஃபியூச்சர்ஸ் அதிகமாக இருக்க வேண்டும். ஃபியூச்சர்ஸ் கம்மியா இருந்தாலே அது ஒரு நெகட்டிவ் குறியீடு தான். சில்வர் ஃபியூச்சர்ஸ் நெகட்டிவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தங்கத்தை விடவும் வெள்ளி பல மடங்கு ரிஸ்க் என நான் சொல்கிறேன்" என்றார்.

அதாவது சில நாட்கள் தங்கம் விலை உயர்ந்தாலும் கூட அது சீக்கிரமே அடுத்தடுத்த நாட்களில் சரிந்துவிடுமாம்.. டிசம்பர் மாதம் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடக்கும் நிலையில், அதுவரை தங்கம் விலை இப்படி தான் உயர்ந்தாலும் சீக்கிரம் சரிந்துவிடும் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+