Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? "இது" மட்டும் நடந்தால் போதும்! தங்கம் விலை தடாலடியாக சரியும்! உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகத் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க நிஜமாகவே என்ன காரணம் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை குறைய என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கூட இப்போது வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தாண்டாவது விலை குறையும் என நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை குறைய இருக்கும் வாய்ப்பு தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை கில்லி மாதிரி எகிறி புதிய உச்சத்திற்குப் போய்விட்டது. தங்கம் இந்தளவுக்கு காஸ்ட்லியாக இருந்ததே இல்லை. இப்போதே 24 கேரட் தங்கம், வெறுமன ஸ்டாம்பிங் சார்ஜ் மற்றும், ஜிஎஸ்டி சேர்த்தாலே ரூ.15,000ஐ தாண்டிவிடும். இந்த விலையைக் குறைக்க வேண்டும் என்றால் அரசு தங்கத்திற்கான கஸ்டம் டியூட்டி (இறக்குமதி வரி) குறைக்கணும். அதைக் குறைத்தால் மட்டுமே தங்கம் விலை குறையும்.

ஒரே வழி

அரசு வரி குறைப்பால் தங்கம் விலை குறையும்போது அதைப் பார்த்துவிட்டு, தங்கம் அவ்வளவு தான் இறங்கிவிட்டது என நினைக்க வேண்டாம். அரசு வரியைக் குறைத்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால், இப்போது இருக்கும் நிலைமை பார்த்தால் தங்கம் ராக்கெட்டில் தான் ஏறியது போல இருக்கிறது.

சர்வதேச அரசியல்

ஒரு பக்கம் ட்ரம்ப் வந்து அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவுலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்காவில் இதற்கு முன்பு இருந்த அனைத்து பெடரல் வங்கி கவர்னர்களும் இது தவறு எனச் சொல்லியுள்ளனர். பெடரல் வங்கியின் அதிகாரத்தைப் பாதுகாக்கக் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்

இன்னொரு பக்கம் சீனா 2025ல் இதுவரை இல்லாத அளவுக்குச் சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளனர். அதாவது சீனா தனது நாட்டில் இறக்குமதி செய்த பொருட்களைக் காட்டிலும் கூடுதலாக 1.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை விற்றுள்ளனர். ஒரே வருடத்தில் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைக் கூடுதலாக விற்றுள்ளனர். சீனாவை ஏற்றுமதி மேஷின் என்றே சொல்லலாம். மறுபுறம் இந்தியாவோ ஏற்றுமதியை விட இறக்குமதியையே அதிகம் செய்கிறது.

சீனா

அமெரிக்கா என்ன வரி போட்டாலும் சீனா அதை தாண்டி ஏற்றுமதியில் சாதனை செய்கிறது. அமெரிக்கா ஓவராக மிரட்டினால் ரேர் எர்த் மெடல்களை சீனா வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் செமிகண்ட்டரை வைத்துள்ளது. அமெரிக்கா தான் சரண்டர் ஆகிறதே தவிரச் சீனா விட்டுத் தர ரெடியாக இல்லை. வரி எவ்வளவு வந்தாலும் ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த 1.2 1.2 டிரில்லியன் டாலர் அதையே காட்டுகிறது.

இந்தியாவில் நிலைமை மோசமாகவே இருக்கிறது. நாம் சீனாவிடம் விநாயகருக்கு ஆர்டர் கொடுக்கலாமா? கிறிஸ்மஸ் ட்ரீக்கு ஆர்டர் கொடுக்கலாமா? என்றே யோசித்துக் கொண்டு இருக்கிறோம். இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை ஏறிக்கொண்டே போகும்" என்றார்.

இந்தியா வரி

இந்தியாவில் 2024க்கு முன்பு தங்கத்திற்கு 15% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அப்போது தங்கக் கடத்தலைத் தடுக்க மற்றும் உள்நாட்டு வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15%ல் இருந்து 6%ஆக குறைக்கப்பட்டது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 9% வரி குறைக்கப்பட்டது. இதனால் அப்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்திருந்தது.

இப்போது அடிப்படை சுங்க வரியாக 5%, விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி 1% என மொத்தம் 6% சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க வரியை குறைத்தால் மட்டுமே தங்கம் விலை குறையும் என ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+