Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பிற்கு ஆப்பு! "இது" நடந்தால் தங்கம் பயங்கரமாக விலை சரியும்! ஒரே வரியில் உடைத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்போது தான் தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் சிக்கலில் மாட்டினால் மட்டுமே தங்கம் விலை குறையும் என் சொல்லியுள்ள ஆனந்த் சீனிவாசன், அது எப்படி நடக்கும்.. எப்போது நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் எப்போது டிரம்ப் அதிபராகப் பதவியேற்றாரோ.. அப்போது முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குத் தங்கம் விலை தொடர்ச்சியாகப் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களும் கூட தங்கத்தை வாங்க யோசிக்கிறார்கள். எப்போது தான் தங்கம் விலை குறையும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே தங்கம் விலை குறைய ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ள பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்தாண்டு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் டிரம்ப் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும் என ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.

டிரம்ப் தோற்றால்

இது தொடர்பாக அவர் மேலும், "தங்கம் விலை இன்னுமே உயரவே வாய்ப்பு இருக்கிறது. டிரம்ப் இருக்கே பயமேன்.. அவர் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும். டிரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகள் இருப்பார். அடுத்தாண்டு நவம்பர் வரை டிரம்ப் அதிகாரத்தை ஒன்னும் செய்ய முடியாது. அடுத்தாண்டு நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றம் அவர் கையைவிட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது. அங்குப் பிரதிநிதிகள் சபை, செனட் என இரண்டு இருக்கிறது. அது அடுத்தாண்டு கையை விட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

பிரதிநிதிகள் சபை கையை விட்டுப் போக வாய்ப்பு அதிகம்.. செனட்டில் டிரம்ப் மீண்டும் பெரும்பான்மை பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், செனட்டில் பெரும்பான்மை பெற்றாலே டிரம்ப் தனது நியமனங்களைத் தொடர்ந்து செய்யலாம். ஏனென்றால் நியமனங்கள் செனட்டில் பாஸ் ஆனால் போதும். பிரதிநிதிகள் சபைக்குச் செல்லாது. அதேநேரம் செனட்டும் போய்விட்டது என்றால் அவருக்கு அதிகாரமே இருக்காது. அவர் அதிபராக இருந்து யூஸே இல்லை என்றாகிவிடும்.

ரப்பர் ஸ்டாம்ப் டிரம்ப்

அப்படி இரண்டுமே போய்விட்டது என்றால் பெயரளவில் மட்டுமே அவர் அதிபராக இருப்பார். அடுத்தாண்டு நவம்பரில் தான் தெரியும். இரண்டும் போய்விட்டால் அவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான். அதன் பிறகே தங்கம் விலை குறையும். ஆனால், அதற்கு முன்பு அவர் அடுத்தாண்டு ஜூலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கிக்குப் புதிய கவர்னரை தேர்வு செய்ய வேண்டும். அதில் யாரோ ஒரு கோமாளியை தேர்வு செய்தால் அப்போதும் தங்கம் விலை குறையாது. ஏனென்றால் டிரம்ப் சொல்வதை மட்டுமே அவர் கேட்பார்.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20,000 வரை போகும் என்றே நினைக்கிறேன். அதிகபட்சம் அடுத்த 11 வருடத்தில் தங்கம் விலை ரூ.20,000 வரை போகும். 3, 4 வருடத்தில் கூட போகலாம்.. ஏனென்றால் டிரம்ப் 3 ஆண்டுகள் இருப்பார்.. ஜி ஜின்பிங், புதின் ஆயுசு முழுக்கவே இருப்பார்கள். எனவே, இப்போதைக்குக் குறையாது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி

அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித்தை 5.5%க்கு மேல் உயர்த்தினால்.. தங்கம் விலை பயங்கரமாகக் குறையும். ஏனென்றால் அப்போது முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தை விற்றுவிட்டு டாலரை வாங்குவார்கள். ஆனால் வட்டி விகிதம் 5.5%க்கு மேல் போனால் அமெரிக்கப் பொருளாதாரமே படுத்துவிடும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+