அமெரிக்கா எடுத்த ராட்சச முடிவு.. தாறுமாறாக உயரப்போகும் தங்கம் விலை.. கையை மீறிப்போக போகுது!
சென்னை: அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) அதிகாரிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுத்துள்ளனர். இதனால் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் கண்டிப்பாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு முறை வட்டி குறைக்கப்படும் என்பது குறித்து மட்டுமே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் இரண்டு அல்லது மூன்று முறை வட்டி குறைப்பு செய்யப்பட வேண்டுமா என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. 0.5 சதவிகித குறைப்பு முதல் கட்டமாக செய்யப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் எவ்வளவு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பது முடிவு எடுக்கப்படும். ஆனால் எத்தனை முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை
தங்கம் விலை அசுர வேகத்தில் அதிகரிக்கும்
சர்வதேச தங்கச் சந்தையில் அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) அடுத்தகட்ட முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அமெரிக்கா எடுக்கவுள்ள நடவடிக்கைகள், நடப்பு ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலையை அசுர வேகத்தில் அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியின் பெஞ்ச்மார்க் ஃபெடரல் ஃபண்ட்ஸ் விகிதங்கள், தொடர்ந்து ஆறாவது முறையாக 4.25% முதல் 4.5% என்ற நிலையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளன. இது தற்காலிகமான முடிவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில், அதாவது இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விகிதங்கள் குறைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை : ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம்
ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை வட்டி விகிதக் குறைப்பு இருக்கும். எனினும், 2026ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு கணிப்பு 25 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026ஆம் ஆண்டிலும் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை ஒரு அடிப்படை புள்ளி கூட குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் சேமிப்புகளில் முதலீட்டாளர்கள் பெறும் வருமானம் குறையும். இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் டாலரை விட்டு வெளியேறி, தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இது டாலருக்கான தேவையை குறைத்து, தங்கத்தின் மதிப்பை அதிகரிக்கும். தற்போதைய நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமலும், அதிகரிக்கப்படாமலும் உள்ளது டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மையை நீடித்து தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
தங்கம் விலை என்ன?
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை, மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் காணப்படும் பலவீனமான அறிகுறிகள் ஆகியவை டாலரின் தேவையை குறைத்து அதன் மதிப்பை வலுவிழக்கச் செய்கின்றன. இந்தச் சவாலான சூழல் நீடிப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. இந்த போர்கள் உலகப் பங்குச் சந்தைகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.












Click it and Unblock the Notifications