"தங்கம் விலை.. கவலை வேண்டாம்!" ஒரு வழியாக நிம்மதி கொடுத்த ஆனந்த் சீனிவாசன்! என்ன சொன்னார்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று திடீரென விலை அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பலரும் விலை இன்னும் வேகமாக உயருமோ என அச்சமடைந்துள்ளனர்.. இதற்கிடையே தங்கம் விலை அடுத்த ஓரிரு மாதங்களுக்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. ஒரு நாள் உயர்வு, மறுநாள் சரிவு என மாறி மறியே இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த இரு நாட்களாகத் தங்கம் விலை சட்டென உயர்ந்தது. இரு நாட்களில் மட்டும் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.400 உயர்ந்தது. இதனால் எங்கு மீண்டும் தங்கம் விலை மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்குமோ எனப் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்கம் விலை உயர்வு தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தங்கம் விலை சட்டென உயரப் போவதாகச் சிலர் சொல்லி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பு குறைவு என அவர் கூறியுள்ளார். தங்கம் விலை அடுத்த மாதம் வரை பெரியளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "நேற்று ரொம்ப நாள் கழித்து தங்கம் விலை 2% வரை உயர்ந்தது. 22 கேரட் தங்கம் 11,700 ரூபாயைத் தொட்டுவிட்டது. 18 கேரட் தங்கம் ரூ.9750க்கு வந்துவிட்டது. தங்கம் விலையில் நான் ஃப்ளோர் (குறைந்தபட்ச விலை என சொல்லலாம்) வலிமையாகக் கொண்டே இருக்கிறது. தங்கம் மட்டுமின்றி அமெரிக்கப் பங்குச்சந்தையும் பயங்கரமாக உயர்ந்தது. ஏனென்றால் அமெரிக்கா அரசு ஷட் டவுன் நிலையில் இருந்து மீண்டு வரும் சூழல் தெரிகிறது.
அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்பிக்கள் கட்சி மாறி, ஆளும் குடியரசுக் கட்சிக்காக வாக்களித்துள்ளனர். எனவே, சீக்கிரம் அமெரிக்க ஷட் டவுன் முடிவுக்கு வந்துவிடும். அந்த மகிழ்ச்சியில் அமெரிக்கப் பங்குச்சந்தை, தங்கம் என எல்லாமே உயர்ந்துவிட்டது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து ₹11,700க்கு போய்விட்டது.
குப்புனு ஏறுமா?
இப்போது பலரும் தங்கத்தை இப்போதே வாங்கிவிடுங்கள்.. மொத்தமாக வாங்குவது சிறந்தது இல்லை என்றால் தங்கம் விலை குப்புனு ஏறிவிடும் எனப் பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், தங்கம் விலை இப்போது குப்புனு எல்லாம் உயராது. அமெரிக்க பெடரல் வங்கி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். அமெரிக்க பெடரல் வங்கியை டிரம்ப் தாக்கிப் பேசி, எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்கம் விலை வேகமாக உயரும். இல்லையென்றால் உயராது.
அடுத்த மாதம் என்னவாகும்?
அதேபோல டிசம்பரில் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடக்கிறது. அதில் வட்டி குறைப்பு தொடர்பாக நெகடிவ் ஆக பேசினால் தங்கம் விலை சரியும். எனவே, டிசம்பர் வரை தங்கம் விலை இப்படியே ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கும். எனவே, தங்கம் விலையைப் பற்றி நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்குத் தேவை என்றால் மட்டும் தங்கத்தை மொத்தமாக வாங்குங்கள். இல்லையென்றால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சிறந்ததாக இருக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications