தங்கம் விலை இனி குறையாது.. அடுத்த டார்கெட் இதுதான்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் அது புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.. இதற்கிடையே தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ள ஆனந்த் சீனிவாசன், அடுத்த 6 மாதங்களில் தங்கம் விலை இன்னும் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

தங்கம் விலை எங்கோ புது உச்சத்திற்குப் போய்விட்ட நிலையில், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை இன்னுமே கூட உயரவே போவதாகச் சொல்லி இடியை இறங்கியுள்ளார் ஆனந்த் சீனிவாசன். அடுத்த 6 மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரவே செய்யும் என அவர் சொல்லியிருக்கிறார்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி 0.5% வட்டி குறைப்பைச் செய்யும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அது 0.25% மட்டுமே வட்டியைக் குறைத்திருந்தது. ஆனால் இந்த ஏமாற்றத்தால் ஒரே ஒரு நாள் மட்டுமே தங்கம் விலை சரிந்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. நேற்று 22 கேரட் தங்கம் ரூ.10,500ஐ தாண்டிவிட்டது. இன்னும் தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது. நமக்குத் தங்கம் விலையைப் பார்த்தாலே வாய் எல்லாம் பல்லாகிவிடும். அவ்வளவு தூரம் மகிழ்ச்சி தரும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது" என்றார்.

அதாவது ஆனந்த் சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தை வாங்கச் சொல்லித் தொடர்ந்து சொல்லி வருகிறார். நமது நாட்டில் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆபத்தான காலங்களில் தங்கமே உதவும் என்பதால் அதை வாங்க வேண்டும் எனச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தான் சொன்னதைக் கேட்டு முன்பே தங்கம் வாங்கியவர்களுக்கு நல்ல லக் என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தங்க விற்பனை

அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவில் உள்ள நகைக்கடைகளில் கிராம் அளவில் பார்த்தால் தங்க விற்பனை சரிந்துள்ளது. ஆனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிராம் அடிப்படையில் விற்பனை குறைந்திருந்தாலும், எவ்வளவு மதிப்பிலான தங்கம் விற்கப்பட்டது எனப் பார்த்தால் அது எகிறியிருக்கிறது.

தங்கம் விலை எவ்வளவு உயரும்?

என்னைக் கேட்டால் தங்கம் விலை ரூ.11,500 முதல் ரூ.11,700 வரை போக வாய்ப்பு இருக்கிறது. அதாவது இப்போது இருக்கும் ரேட்டில் இருந்து ரூ.1000 முதல் ரூ.1500 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. எப்போது உயரும் எனக் கேட்டால் அடுத்த 6 மாதங்களில் உயரும். அதற்கு நடுவிலேயே கூட தங்கம் விலை இந்த ரேஞ்சுக்கு வந்துவிடலாம். அதற்கும் கூட வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை இரண்டு முறை 0.25% வட்டியைக் குறைக்கும். அப்போது இந்த விலைக்குத் தாராளமாக வந்துவிடும். இதுவரை நான் மட்டுமே தங்கம் விலை உயரும் எனச் சொல்லி வந்தேன். இப்போது பல சர்வதேச வல்லுநர்களும் அதையே தான் சொல்கிறார்கள்.

தங்கம் ஏன் முக்கியம்

சிலர் தங்கத்தில் காசு வராதே (cash flow) எனச் சொல்கிறார்கள். வாரன் பபெட் கூட இதைத் தான் சொன்னார் என்பார்கள். ஆனால், அமெரிக்காவில் இருக்கும் கதை வேறு.! அங்கு யாருக்கு வேண்டுமானாலும் கடன் கிடைக்கும். ஆனால், நமது நாட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்குக் கடன் ஈஸியாக எல்லாம் கிடைக்காது. தங்கம் இருந்தால் தான் லோன் கிடைக்கும். அவசரத்திற்குத் தங்கம் மட்டுமே உதவும்.

இதனால் தான் சொல்கிறேன் மிடில் கிளாஸ் மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் தங்கம் தான் சிறந்த சேமிப்பு கருவியாக இருக்கிறது. தங்கம் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50% லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 4 மடங்கு உயர்ந்துவிட்டது. இங்கிருந்து இறங்கினாலும் பிரச்சினை இல்லை. அதற்காக நான் இறங்கும் எனச் சொல்கிறேன் என அர்த்தமில்லை.

தங்கம் விலை குறையாது

தங்கம் விலை குறைய வாய்ப்பு ரொம்ப குறைவு. பெரிய சம்பவம் நடந்தாலும் கூட தங்கம் விலை அதிகபட்சம் ரூ.9500க்கு மட்டுமே போகும். ஆனால், இது இப்போதைக்கு வராது. தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறதே தவிரக் குறைய வாய்ப்பே இல்லை" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+