விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ51,000-த்தை தாண்டியிருப்பது பொதுமக்களக் பெரும் அதிர்ச்சியடைய உள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தைத் தொட்டிருப்பது நடுத்தர மக்களின் நகை கனவுகளை தகர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத்தான் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கொரோனா காலத்தில் அதாவது 2020-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ30,000 இருந்தது. அடுத்த ஒரே ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ35,000 ஆக அதிகரித்தது. கடந்த 2022-ம் ஆண்டில் ரூ40,000 ஆக உயர்ந்த ஒரு பவுன் தங்கத்தில் விலை தற்போது ரூ51,000-த்தை தாண்டிவிட்டது.
2023-ம் ஆண்டில் ரஷ்யா- உக்ரைன் யுத்தம், இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ45,000 ஆக அதிகரித்தது. தற்போது விண்ணைத் தொடும் உச்சமாக வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ51,000 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ46,520-க்கு விற்பனையானது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ48,000-த்தை கடந்த நிலையில் மாத இறுதியில் ரூ51,000-த்தை தாண்டிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ25,000-க்கு உயர்ந்துள்ளது.
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். இந்த ஆண்டு இறுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ55,000-த்தை எட்டும் என்கின்றனர்.
1920-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ21 ஆக இருந்தது. 2001-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ3,000 என்ற அளவில் இருந்தது. 2010-ம் ஆண்டில் ரூ15,000; 2020-ம் ஆண்டில் ரூ ரூ30,000-த்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் இப்போது ரூ51,000-த்தை எட்டியிருப்பது நடுத்தர மக்களை ஏக்கப் பெருமூச்சுவிட வைத்து கொண்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications