Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க விற்பனை 15% வீழ்ச்சி? வாங்கலாமா? வேண்டாமா? 23 ஆம் தேதி வருமா குட் நியூஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விற்பனை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ள ஆனந்த் சீனிவாசன், அதற்கு என்ன காரணம் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். தங்கம் வாங்குவதற்குச் சரியான தருணம் எது என்பதையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

தங்கம் என்பது மற்ற உலோகங்களைப் போன்றது அல்ல. அதாவது காப்பர், இரும்பு, அலுமினியம், ஸ்டீல் போன்றது அல்ல. தங்கம் அல்லாத மற்ற உலோகங்கள் தேவை அதிகரித்துவிட்டால், விலையானது ஏறிவிடும். தங்கம் என்பது அப்படி அல்ல. தங்கத்திற்கான தேவை இப்போது அதிகரித்துவிட்டதா என்றால் இல்லை. வழக்கம் போல் தங்கத்திற்கு என்ன தேவை உள்ளதோ அதே நிலைதான் நீடிக்கிறது.

Gold market Anand Srinivasan

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 10 நாட்களில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்தால்தானே விலை ஏற வேண்டும்? அப்படி இல்லாத போது ஏன் விலை அதிகரித்தது என்றால், அங்குதான் வேறு காரணங்கள் இருக்கின்றன.

முதலீட்டுக்கு தங்கத்தைவிடச் சிறந்த உலோகம் வேறு கிடையாது. அதுதான் இருப்பதிலேயே பெஸ்ட். நாம் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனம் நொடிந்துவிட்டால் நம் முதலீடு போய்விடும். அல்லது பங்குச்சந்தையில் ஒரு ஊழல் வந்துவிட்டால், நம் முதலீட்டுக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும். தங்கத்தின் மதிப்பானது பணத்தைப்போல நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. எல்லா நாடுகளிலும் தங்கத்திற்கு மதிப்பு உள்ளது. ஆகவேதான் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள்.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு மேலும் அதிகரித்தது. விலை உச்சத்திலிருந்து வந்ததை வைத்து இன்னும் 6 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாயை எட்டிவிடும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டு இருந்தார்கள். அக்ஷய திருதியை ஒட்டி தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருந்த போது, சீனா ஒரு பக்கம் தங்கத்தின் முதலீட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது.

Gold market Anand Srinivasan

ஆனால், இப்போது தங்கத்தின் முதலீடு என்பது இந்தியாவில் குறைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 13 முதல் 15% வரை தங்கத்தின் விற்பனை குறைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருக்கிறது. கடந்த மே மாதம் உச்சத்திலிருந்த விற்பனை இந்த இரண்டு மாதங்களில் ஏன் சரிந்தது என்பது பற்றி பங்குச் சந்தை நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். மேலும் தங்கத்தை இப்போது வாங்கலாமா? அல்லது எப்போது வாங்கலாம் என்பதைப் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.

தங்க மார்க்கெட் வீழ்ச்சிக்கு என்ன காரணம் ? ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், "தங்க விற்பனையில் zaveri bazar தான் டாப். இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய கோல்டு மார்கெட். இது மும்பையில்தான் உள்ளது. அவர்கள் சொல்வதைப் பலரும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் இந்தியாவில் உள்ளவர்கள் யாரும் அதிகம் தங்கம் வாங்குவதில்லை என்றும் விற்பனை கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

சென்னை ஏர்போர்டில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 200 கிலோ வரை கடத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் 27 கோடி ரூபாய் புழங்கியுள்ளது. இப்படி கள்ளத்தனமான வழியில் இந்தியாவிற்குத் தங்கம் வந்துள்ளது. ஆகவேதான் ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் தங்க விற்பனையானது 15% கீழே விழுந்துள்ளது.

இந்த வீழ்ச்சியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைத்தால் சரிசெய்ய முடியும் என்று ஸ்வேரியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் வரி இருக்கிறது. அதை 500 ரூபாயாகக் குறைத்தால் இந்த நிலை சீராகும் என்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20% தங்கத்தின் விலை ஏறியுள்ளது. ஒரிசாவில் ஜெகன்நாத் ரத் யாத்ரா என்று ஒன்று நடந்தது. அதனால் தங்க விற்பனை கொஞ்சம் தப்பித்தது. அது நடக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரியில் 10 கிராம் தங்கம் கிட்டத்தட்ட 63,870 ரூபாய் இருந்தது. இது 24 கேரட் தங்கத்தின் விலை. இப்போது 73 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல்களை இந்திய தங்க விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கின்ற ப்ரிதிவ் ராஜ் கோதாரி தான் சொல்லி இருக்கிறார்.

இந்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான 15% வரியை நிர்மலா சீதாராமன் குறைத்தால், தங்க விற்பனையில் மாற்றம் ஏற்படும். அதனால் பொறுத்திருந்து வாங்கினால் கிராமுக்கு சில ஆயிரங்கள் இலாபமாகக் கிடைக்கும். அதை எதிர்பார்த்து பலர் தங்கம் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று இவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

இன்னொரு தங்கக்கடை உரிமையாளர் கடந்த ஆண்டை விடத் தங்கத்தின் விற்பனை 12% குறைந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார். ஆக, ஜூலை 23 ஆம் தேதிதான் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான வரியைக் குறைப்பாரா? அல்லது அதே அளவுக்கு வைப்பாரா? இல்லை என்றால் இன்னும் கூட்டுவாரா? என்பது தெரியவரும்.

ஆகவே, தங்கம் வாங்க உள்ளவர்கள் இந்தத் தேதிவரை காத்திருந்து பார்த்துவிட்டு வாங்கவும். ஒருவேளை லாபம் வரலாம். இல்லை என்றால் விலை உயரவும் செய்யலாம்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+