நகைக்கடைகளில் கோல்டு ஸ்கீம்.. ஏமாந்துடாதீங்க! இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டு திட்டத்துல காசு போடுங்க!
சென்னை: தங்கம் விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது. இந்த விலையேற்றம் காரணமாக சாமானிய மக்கள் நகை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டம் என்கிற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இப்படியான திட்டங்கள் உண்மையில் லாபமானதா? என்பது குறித்து சென்னை நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி விளக்கமளித்துள்ளார்.
ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், கூறியதாவது, "தங்கம் விலை உயர்ந்தாலும், தங்களுடைய தேவைகளை குறைத்துக் கொள்ள மக்கள் விரும்பவில்லை. அதனால், அவர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை கொண்டு புதிய தங்க நகைகளாக மாற்றுகிறார்கள்.

அதேபோல தங்களுடைய தேவைகளுக்கு, 22 கேரட் மட்டுமல்லாமல் 9 கேரட் மற்றும் 14 கேரட் நகைகளில், மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வரும் காலங்களில் 9 மற்றும் 14 கேரட்டுகள் மக்களுடைய பெரிய அளவில் பிரபலமாகும்.
தங்கம் வாங்குவதில் பிரச்சனை
காரணம் என்னவெனில், 9 மற்றும் 14 கேரட்டுகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் ஹால்மார்க் முத்திரை இந்த நகைகளில் பதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் வந்து இயற்றப்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் 9 மற்றும் 14 கேரட்டுகள் பெரிய அளவில் மக்களிடையே பிரபலம் அடையும். இது மக்களுக்கு எளிதாக தங்கம் வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும். இந்த 9 கேரட்டும் 14 கேரட் நகைககள், ஒரு சவரன் ₹60,000 அல்லது ₹50,000க்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே தங்கம் வாங்குவதற்கு சாமானிய மக்களிடையே எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
விலை குறையும் வரை காத்திருக்கலாமா?
கடந்த காலங்களில் தங்கம் விலையில், பெரிய குறைவு ஏதும் இல்லை. விலை குறையும் காத்திருப்போம் என்று காத்திருந்தவர்கள் எல்லாம் ஏமாந்தவர்கள் ஆகிவிட்டார்கள். பணம் இருக்கும் ஆனால், வாங்குவதற்கு மனம் இருக்காது. இது தவறான முடிவு. எனவே உபரியாக உள்ள பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்த யோசனை சரியானது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக தங்க விலை குறையாது. தங்க நகை சேமிப்பு திட்டத்திலும் இணையலாம்.
நகை சேமிப்பு திட்டத்தை நம்பலாமா?
நகை சேமிப்பு திட்டத்தில், பணமாக செலுத்தி உடனடியாக தங்கமாக மாற்றக்கூடிய வகையில் நிறைய நிறுவனங்கள் வந்து செய்து வருகின்றன. அதுபோன்ற திட்டம் பாசிட்டிவானது. நீங்க இன்னைக்கு ரூ.10,000 பணத்தை கட்டறீங்கன்னு சொன்னா.. இன்னைக்கு கொடுக்கற 10,000 ரூபாய்க்கு என்ன கிராம் இருக்கோ அந்த கிராம், உங்களுடைய கணக்குல வச்சிருவாங்க. இதனால் நகையின் விலை ஏறினாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த திட்டம்தான் உங்களுக்கு லாபம்.
இன்னைக்கு ரேட்டுல.. ஒரு சவரன் ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. இதனால், ஒரே நேரத்துல லட்சக்கணக்குல பணம் கொடுத்து நகை வாங்க முடியாது. நகை சேமிப்பை அதிகரிக்க.. இதுபோன்ற திட்டங்கள் அவசியம்.
வெள்ளி vs தங்கம் எதில் முதலீடு செய்யலாம்?
முதலீடு என்று பார்க்கும் பொழுது, இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிற சூழ்நிலையில்.. தங்கத்தை விட வெள்ளினுடைய முதலீடுகள் பல மடங்குகள் பெரிய லாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. வெள்ளி விலை பெரிய அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் விலை உயரும். ஒரு கிலோ ரூ. 5 லட்சம் வரை விலை உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வெள்ளியின் தேவை
வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாக மட்டுமி இல்லாமல், தொழில் துறைக்கு பெரிய தேவையான பொருளாக மாறிவிட்டது. வரும் காலங்கள் இன்னும் அதனுடைய தேவை பெரிய அளவில் இருக்கும். காரணம் நம்முடைய எலக்ட்ரானிக் வாகனங்கள், சோலார் பேனல், ஏரோநாட்டிகல், லித்தியம் பேட்டரி என எல்லா பொருட்களிலும் வெளிக்கு தேவை இருக்கிறது.
வெள்ளியினுடைய தேவை வந்து இரண்டு முகமாக உள்ளது. ஒன்று முதலீட்டு பொருளாகவும், இரண்டாவது தொழில் துறைக்கு ஒரு மூலப்பொருளாகவும் இருக்கிறது. அதனால வரும் காலங்களில் வெள்ளியின் தேவை அதிகரிக்கும். எனவே தங்கம் அல்லது வெள்ளி இரண்டில் எதில் முதலீடு செய்யலாம்? என்று கேட்டால்.. நான் வெள்ளியைதான் சொல்வேன்.
டிஜி கோல்டு
டிஜி கோல்டுக்கு ரிசர்வ் வங்கி ஆதரவு கொடுக்கல. எந்தவித உத்தரவாதமும் தரவில்லை. காரணம் டிஜி கோல்டு செய்பவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படவில்லை. அதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அதனால டிஜி கோல்டு மூலமாக பெறப்படும் பணம் எதில் முதலீடு செய்கிறார்கள் என்பது ரிசர்வ் பேங்க் கேட்காது யாருக்கும் தெரியாது. எனவே உஷாரா இருங்க" என்று கூறியுள்ளார்.
-
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications