Gold Price: தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக சரிய போகுது.. சர்வதேச சந்தையில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!
சென்னை: தங்கம் விலை 3 முதல் 5 சதவீதம் வரை சரிய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. INVasset PMS நிறுவனத்தின் ஹர்ஷல் தசானி கணிப்பின்படி, அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டால், தங்கத்தின் விலை கடுமையாக குறையும் எனவும், வெள்ளி விலை மிகக் கடுமையாக 5 - 8% வரை சரிவைச் சந்திக்கக்கூடும் என்று கணித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை வேகமாக உயர்ந்து வந்தது. சர்ரென விலை உயர்ந்ததாலும், ஈரான் அமெரிக்கா போரின் காரணமாகவும் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரிய தொடங்கியுள்ளது. இன்றும் காலை, மாலை என ஒரே நாளில் ரூ.1,560 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

ஈரான் இஸ்ரே போர் எதிரொலி
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மகுடம் சற்றே சரியத் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் (இன்று):
சொல்லி வைத்தது போலவே, இன்று சர்வதேச வர்த்தகத்தில் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன..
* தங்கம்: ஒரு அவுன்ஸ் விலை 3.52% குறைந்து 5,136.11 டாலராக வர்த்தகமாகிறது.
* வெள்ளி: ஒரு அவுன்ஸ் விலை 8.40% என்ற மிகப்பெரிய சரிவைச் சந்தித்து 81.8 டாலர் அருகே உள்ளது.
திடீர் விலை சரிவுக்கு என்ன காரணம்?
போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தை எட்டியது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் விலையைச் சரித்துள்ளன:
1. முதலீட்டாளர்களின் மனநிலை மாற்றம்: போர் மேகங்களுக்கு இடையே திடீர் திருப்பமாக, முதலீட்டாளர்கள் தங்கம் மீதான கவனத்தைக் குறைத்து, கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலர் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
2. அமெரிக்க டாலரின் ஆதிக்கம்: அமெரிக்க டாலர் மதிப்பு ஐந்து வார உச்சத்தில் நீடிப்பதால், தங்கம் விலை உயர்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
3. ராஜதந்திர நகர்வுகள்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அல்லது உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், "பாதுகாப்பு பிரீமியம்" (Safe Haven Premium) குறையத் தொடங்கியுள்ளது.
நிபுணர்களின் எச்சரிக்கை: 3% - 8% வரை சரிய வாய்ப்பு!
INVasset PMS நிறுவனத்தின் ஹர்ஷல் தசானி அவர்களின் கணிப்பின்படி:
* அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டால், தங்கத்தின் விலை 3 - 5% வரை குறையலாம்.
* வெள்ளி விலை மிகக் கடுமையாக 5 - 8% வரை சரிவைச் சந்திக்கக்கூடும்.
இன்று சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்கம், நாளை இந்திய MCX சந்தையிலும் எதிரொலிக்கும். இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையில் நாளை ஒரு பெரிய சரிவை நாம் எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை போர் மீண்டும் தீவிரம் அடைந்தால், இந்திய சந்தையில் தங்கம் 10 கிராம் ரூ.1,70,000 வரையிலும், வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000 வரையிலும் செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் விலை சரிவுப்பாதையிலேயே உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
03.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (இன்று மாலை)
3.03.2026 - ஒரு சவரன் 1,25,200 (இன்று)
2.03.2026 - ஒரு சவரன் 1,25,280 (நேற்று)
1.03.2026 - ஒரு சவரன் 1,26,200
28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (பிற்பகல்)
28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (காலை)
27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications