டிரம்புக்கு ஒரு கும்புடு.. தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்!
சென்னை: சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்வதாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதனால் இந்திய மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.
உலக வர்த்தகத்தில் தங்கத்தின் விலை சில காரணிகளால் அதிகரிக்கும், சில காரணிகளால் குறையும். இப்போதைய சூழல் தங்கத்தின் விலையை குறைக்கும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்பார்க்கும் அளவுக்கு விலை குறையவில்லை என்றாலும் கூட, அதிக அளவில் விலை உயர்வதை தற்போதைய சூழல் கட்டுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க டாலரும் தங்கமும்:
அமெரிக்க டாலரும், தங்கமும் இரண்டு எதிர் எதிர் துருவங்கள். டாலர் மதிப்பு அதிகரித்தால் தங்கத்தின் விலை மள மளவென சரிய தொடங்கும். டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துதானே வருகிறது? அப்புறம் ஏன் தங்கத்தின் விலை குறையவில்லை என்கிற கேள்வி எழலாம்.
உண்மையில் இன்றைய தங்கத்தின் விலை, சுமார் 3 மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் டாலர் மதிப்பு வலுப்பெற்றதால் தங்கம் லேசான விலை உயர்வைதான் சந்தித்து வருகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தங்கம் விலை எப்படி சரியும்?:
உலகம் முழுவதும் தங்கம் அமெரிக்க டாலரில்தான் வாங்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, ஒரு டாலரின் மதிப்பு ரூ.80 ஆக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் 1 அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தை வாங்க வேண்டும் எனில் ₹1,68,000 கொடுத்தால் போதும். ஆனால், இதே டாலரின் மதிப்பு ரூ.86 ஆக உயரும்போது.. ₹1,80,600 செலவழிக்க வேண்டும். அதாவது,
1 டாலர் = ₹80 என்றால், 1 அவுன்ஸ் தங்கம் = ₹1,68,000
1 டாலர் = ₹86 ஆக உயர்ந்தால், 1 அவுன்ஸ் தங்கம் = ₹1,80,600
எனவே தங்கத்தை வாங்குபவர்கள், டாலரின் மதிப்பு உயர்வால் கொள்முதலை தள்ளி போடுவார்கள். இதனால் தங்கத்துக்கான டிமான்ட் குறையும். உலகம் முழுவதும் தங்க வியாபாரிகள் டாலர் மதிப்பை கண்டு தயங்கி, தங்கம் வாங்குவதை தள்ளி போடுவார்கள். இதனால் தங்கத்தின் விலை குறையும்.
முழுமையாக குறையவில்லை என்றாலும் கூட விலை கடுமையாக உயராது. இதுதான் தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது.
டாலரின் பலம் என்ன?:
இன்றைய தேதியில் US Dollar Index (DXY) 107ஐ கடந்திருக்கிறது. அதாவது Euro, Yen, Pound உள்ளிட்ட மற்ற நாடுகளின் கரன்சியுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலர் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் டாலரை நோக்கி படையெடுத்துள்ளனர். வழக்கமாக தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. ஆனால், மேலே குறிப்பிட்டதை போல தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளதால் டாலரில் முதலீடு செய்கின்றனர்.
இருப்பினும் மாறி வரும் உலக பொருளாதார சூழல் காரணமாக டாலரின் மதிப்பிலும் பாதிப்பு ஏற்படலாம். டாலர் விலை திடீரென சரியலாம். உதாரணமாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கென தனி கரன்சியை உருவாக்கி வருகின்றன. இது தொடர்பான அப்டேட்கள் வரும்போதெல்லாம் டாலர் சரியும். எனவே, தங்கம் விலை சரிவு என்பது தற்காலிகமானதுதான் என்பதையும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த விலை உயர்வு, சரிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications