வீடு vs தங்கம்.. எது பெஸ்ட் சேமிப்பு! அவசர காலத்தில் எது நிஜமாக உதவும்! ஆனந்த் சீனிவாசன் பளிச்
சென்னை: நமக்கு திடீரென எதிர்பாராத விதமாகப் பிரச்சினை எதாவது வந்துவிட்டால் அதைச் சமாளிக்கச் சொந்த வீடு அல்லது நிலம் இருந்தால் அது எந்தளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் சேமிப்பு என்று வரும் போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஒன்று தங்கம், மற்றொன்று வீடு. இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் எந்த ஆபத்தாக இருந்தாலும் ஈஸியாக தப்பிக்கலாம் என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது.

பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் எல்லாம் அனைவருக்கும் தெரியாது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் இளைஞர்களில் கூட சுமார் 90% அதிகமானார் டிரேடிங் தான் செய்கிறார்கள். நீண்ட கால முதலீட்டை அவர்கள் பங்குச் சந்தையில் செய்வதே இல்லை.
வீடு வாங்கணும்: இதனால் நமது நாட்டில் நீண்ட கால முதலீடு என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது தங்கமும் சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலமும் தான். அதில் தங்கம் கூட ஒருவரிடம் எத்தனை இருக்கிறது என்பது அவராகச் சொன்னால் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மேலும், தங்கத்தை வெறும் சில ஆயிரம் ரூபாயில் இருந்தே வாங்கத் தொடங்கலாம். ஆனால், வீடு அல்லது நிலம் அப்படி இல்லை. அதை வாங்குவதே ஒரு கவுரமாக இங்கே பார்க்கப்படுகிறது. மேலும், அதற்குப் பெரு முதலீடும் தேவைப்படும்.
சேமிப்பு, முதலீடு என்பதைத் தாண்டி அது ஒரு கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் இளைஞர்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று என்னப்பா வீடு வாங்கலையா என்பது தான். இதனால் பலரும் கடனை வாங்கியாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என நினைத்துச் செய்கிறார்கள். இதனால் முதலீடு அல்லது சேமிப்பாக இருக்க வேண்டிய வீடு கூட கடனாக மாறிவிடுகிறது. அந்த கடனை அடைக்கவே 20, 30 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி உள்ளது.
வினோத விளக்கங்கள்: ஆனால், இதற்கும் ஒரு சிலர் வினோதமான விளக்கத்தைத் தருவார்கள் அதாவது.என்ன தான் கடன் என்றாலும் அதைத் தாண்டி நமக்கு சில ஆண்டுகளில் லாபம் வந்துவிடும்.. கொஞ்ச ஆண்டுகள் போனால் விலை பல மடங்கு அதிகரிக்கும். மேலும், எதாவது ஆத்திர அவசரம் என்றால் உடனடியாக விற்றுவிடலாம். அல்லது லோன் கூட கிடைக்கும்.என்பார்கள். ஆனால், இது உண்மை தானா.. இதில் இருக்கும் பிரச்சினை என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
பிரச்சினைகள் என்ன: இது குறித்து சமீபத்தில் அவர் தனது யூடியூப் சேனலில், ""பலரும் இங்கே வீடு வங்கினால் அது நல்ல முதலீடு என நினைக்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. காலம் மாறிப்போச்சு.. நகருக்குள் வேலை செய்யும் நாம் ஊருக்கு வெளியே பல கிமீ தொலைவில் வீடு வாங்குவதால் எந்த பயனும் இல்லை. மேலும், நீங்கள் வாங்கும் வீடு அல்லது நிலத்தில் பிரச்சினை இல்லை என்பதைக் கண்டறிவதும் சிரமம்.. 10,15 ஆண்டுகளுக்கு பிறகும் கூட பிரச்சினை வரலாம். நமது சென்னையிலேயே கூட இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கிறது" என்றார்.
சிலர் வீட்டை வாங்கி வாடகைக்கு விடலாம் என்பார்கள். தனக்குச் சொந்தமாகவும் நகரில் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், வாடகையை வசூலிப்பது எல்லாம் அவ்வளவு ஈஸியானது இல்லை என்றும் பெரு நிறுவனங்களுக்குக் கூட இதில் சொதப்பும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வீட்டில் வசிப்போர் எதாவது பிரச்சினை எனச் சொன்னால் ஒவ்வொரு முறையும் அனைத்து வேலையையும் விட்டுவிட்டு அதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணம் கிடைக்குமா: தொடர்ந்து வீடு ஒரு சேமிப்பு கருவியாக இருக்குமா என்பது குறித்துப் பேசிய அவர், "சேமிப்பு என்பதே திடீரென எதாவது எமெர்ஜென்சி ஏற்பட்டால் உடனடி பணத் தேவையைச் சமாளிக்க உதவும் என்பது தான். அதாவது உங்களுக்கு இன்று பணம் தேவை என்றால் இன்றே அது கிடைக்க வேண்டும். ஆனால், நிலம் அல்லது வீட்டில் அப்படி நடக்காது. அவற்றை விற்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஒரு வீட்டை விற்கப் பல மாதங்கள் அவ்வளவு ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம். இப்படி பலரை எனக்குத் தெரியும்.
நிலம் மற்றும் வீட்டைச் சீக்கிரம் விற்கவும் முடியாது. வங்கியில் வைப்பதும் சிரமம். நீங்கள் அனைத்து டாக்குமெண்டுகளையும் எடுத்துச் சென்றாலும் அந்த வங்கி மேனேஜர் மனசு வைத்தால் மட்டுமே உங்களுக்கு சில நாட்களில் லோன் கிடைக்கும். இல்லை என்றால் கஷ்டம் தான் எனவே, மிடிள் கிளாஸ் மக்களுக்கு நிலம் என்பது அவசர தேவைக்கு உதவாது. ஆனால், தங்கம் அப்படி இல்லை. எப்போது வேண்டுமானாலும் ரொம்பவே ஈஸியாக பணமாக மாற்ற முடியும். தங்கத்தை விற்பதும் ஈஸி,, அடகு வைப்பதும் ஈஸி" என்றார்.
அதாவது சேமிப்பு என்றால அது அவசர காலத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும். இந்த ஒன்றை வைத்துப் பார்த்தால் நிலம் அல்லது வீடு அதில் உதவாது. மேலும், பல ஆண்டுகளாகப் பல இடங்களில் வீடு அல்லது நிலத்தின் விலை அதிகரிக்காமல் கூட இருக்கிறது. சென்னையிலேயே இப்படி நாம் பல இடங்களை பார்க்கலாம். அதேநேரம் தங்கம் விலை எப்போதும் அதிகரித்தே வந்துள்ளது. எனவே, நிலம் அல்லது வீடு என்பது சரியான முதலீடாக இருக்காது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications