Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வென்ற கில்லி கார்த்திகா! சென்னை கண்ணகி நகருக்கே கிளம்பி போன மாரி செல்வராஜ்! வாவ் ₹10 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று கலக்கியிருந்தது.. சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் பங்கும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.. இதையடுத்து கார்த்திகாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்தவகையில், பைசன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நேரிலேயே சென்று கார்த்திகாவை வாழ்த்தியிருக்கிறார்.

வாழை பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Gold Winner Karthika Chennai Kannagi Nagar

ரூ.30 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது பைசன்..

சக்ஸஸ் படம்

அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது கடந்த 17ம் தேதி வெளியாகி பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பைசன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜூக்கு போன் போட்டு பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பைசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பைசன் திரைப்படம் அமைந்துள்ளது என்று பதிவிட்டார்.

பைசன் படத்தை பார்த்து வியந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசி பாராட்டு தெரிவித்திருந்தார்.

Gold Winner Karthika Chennai Kannagi Nagar

பைசன் படம் சபாஷ்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மனத்தி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. கபடி விளையாட்டில் சாதனை படைத்து தமிழகத்தில் 2-வது நபராக அர்ஜுனா விருது பெற்று புகழ் பெற்றவர் ஆவார்.

கபடி விளையாட்டை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த படத்தின் பரபரப்பும், ஆர்வமும் இன்னமும் அடங்காத நிலையில், பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று அசத்தியுள்ளது.

தங்கம் வென்ற கில்லி கண்ணகி கார்த்திகா

ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இதில், இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தொடரில் கார்த்திகா இந்திய அணியின் துணை கேப்டன் ஆவார்.. தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

₹10 லட்சம் ஊக்கத்தொகை

அந்தவகையில், ஆசிய கபடி போட்டியில் தங்க வென்ற கார்த்திகாவையும், அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் பைசன் படக்குழு பாராட்டியுள்ளது. பைசன் படக்குழுவினர் சார்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கண்ணகி நகர் கார்த்திகாவின் வீட்டுக்கே சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜ் வழங்கினார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகையாக இந்த தொகையை வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+