வீடியோ எடிட்டிங் சூப்பரா கத்துக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் 3 நாள் பயிற்சி! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத்திருத்தம் பயிற்சி' மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
வீடியோ எடிட்டிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னையில் சிறப்பு வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத்திருத்தம் (Color Correction) பயிற்சியை நடத்த உள்ளது.

பிப்ரவரி 24 (செவ்வாய்) முதல் பிப்ரவரி 26 (வியாழன்) வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- VFX / Fusion போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.
- Audio Post-Production - Fairlight அறிமுகம் செய்யப்படும்.
- நெட்பிளிக்ஸ் / யூ-ட்யூப் உள்ளிட்ட தளங்களுக்கான Output Delivery பயிற்சி
- நிறத்திருத்தம் (Colour Correction), நிறத் தரமயம் (Colour Grading) மற்றும் Look Development பயிற்சி.
- D.I.T (Digital Intermediate Technician) - செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளுடன் தொழில்முறை வீடியோ மற்றும் திரைப்பட எடிட்டிங் அறிமுகம்.
- D.I Colour Correction - AI கருவிகளில் பயிற்சி
தொழில் வாய்ப்புகள்
- திரைப்படங்கள், விளம்பர படங்கள், யூ-ட்யூப் வீடியோக்கள், திருமண வீடியோக்கள் மற்றும் META Content உள்ளிட்டவைக்கான வீடியோ எடிட்டராகலாம்.
- திரைப்படங்கள், OTT தளங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்களுக்கு Colourist / Colour Grading Artist ஆக மாறலாம்.
- படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளின் சூப்பர்வைசர்/ உதவியாளர் / உதவி எடிட்டர் ஆக மாறலாம்.
- வீடியோ எடிட்டர், கலரிஸ்ட் மற்றும் வீடியோ எடிட்டர் மற்றும் கலரிஸ்ட் உள்ளிட்ட பணிகளை சுய தொழிலாக மேற்கொள்ளலாம். மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் (ஆண்/ பெண் / திருநங்கைகள்/ திரும்பியவர்கள்/ தொழில் முனைவோர்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிசிக் கட்டணம் ரூபாய் 7,000.
கல்வித் தகுதி
இந்த பயிற்சி பெற குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் கூடுதல் விவரங்களையும் அறியவும், பயிற்சிக்கு முன்பதிவு செய்யவும் www.editn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்வது எப்படி?
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications