GBU விவகாரம்.. இளையராஜா பாடல்களிலேயே இத்தனை காப்பி இருக்கு.. புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: இசைஞானி இளையராஜா சுமார் 4500க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்ளை பாடி உள்ளார். அவரது பாடல்களும் இசைகளும் பலருக்கு தூங்கும் போது தாலாட்டாக இருக்கிறது. பலருக்கும் உற்சாகம் தரும் மருந்தாக இருக்கிறது. ஒத்த ரூபாய் பாடலை பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜா குட் பேட் அகலி திரைப்படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் அவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், அவரது பாடல்களும் காப்பி அடிக்கப்பட்டவை உள்ளதாக பட்டியல் போட்டுள்ளனர்.
இசைஞானி இளையராஜாவிற்கு மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவர் படைப்பாளியாக தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை தன்னிடமே வைத்துள்ளதாக கூறி வருகிறார்.அதேநேரம் படங்களை தயாரித்த நிறுவனங்களோ தங்களுக்குத்தான் உரிமை உள்ளது என்று கூறுகின்றன. மற்ற இசையமைப்பாளர்களுடன் வராத பிரச்சைனை இளையராஜாவிற்கு மட்டும் தொடர்ந்து வருகிறது.

ஏனெனில் அவரது பழைய பாடல்களை பயன்படுத்தி பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறி உள்ளன. மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் குணா குகை மற்றும் கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தி இருந்தது. அந்த பாடல் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பல தமிழ் படங்களும் தற்போது இளையராஜா பாடல்களை பயன்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த சூழலில் இளையராஜா பாடலைபயன்படுத்தும் நிறுவனங்கள் அந்த பாடலுக்கு காப்புரிமை வைத்துள்ள நிறுவனங்களிடம் மட்டுமின்றி , இளையைராஜாவிடமும் அனுமதி வாங்கவேண்டியது அவசியம் என்கிறார்கள் அவரது வழக்கறிர்கள். அவரது அனுமதி இன்றி தான் குட் பேட் அகலி திரைப்படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம், ரைட்ஸ் உள்ளவர்களிடம் வாங்கித்தான் பயன்படுத்துவதாக கூறினார்.
இதனிடையே இளையராஜா பாடல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதை விமர்சிக்கும் நெட்டிசன்கள், குட்பேட் அகலி திரைப்பத்திற்கு பின்னர் அவரை இன்னமும் வறுத்தெடுக்கிறார்கள். இளையராஜாவே காப்பி அடித்து தான் சில பாடல்களை போட்டிருப்தாக விமர்சிக்கிறார்கள். (மொத்தமே 15 பாடல்களை தான் விமர்சிக்கிறார்கள்).
கார்த்திக், ரேவதி, மோகன் நடிப்பில் 1986ம் ஆணடு வெளியான மௌன ராகம் படத்தின் மௌனராகம்தீம் என்பது காப்பி அடிக்கப்பட்டது என்கிறார்கள். இது 1983ம் ஆண்டு வெளியான பிளாஸ் டான்ஸ் தீம் ( Flash Dance theme) என்று சொல்கிறார்கள்.
அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தை சொல்கிறார்கள். எந்த பூவிலும் வாசம் உண்டு, காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - அன்டோனியோ ரூயிஸ்-பிபோவின் 'கான்சியோன் எட் டான்சா: 2. டான்சா' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
அடுத்தாக பாக்கியராஜ் நடித்த சின்ன வீடு படத்தில் சிட்டு குருவி பாடலை காப்பி என்கிறார்கள். அன்டோனின் டுவோராக்கின் சிம்பொனி எண். 9 இல், ஷெர்சோ: மோல்டோ விவேஸ் என் பாடலின் காப்பி என்கிறார்கள்.
இதேபோல் விஜயகாந்த் நடிப்பில் வந்த சத்ரியன் படத்தின் பாடலான பூட்டுக்கல் போட்டாலும் பாடலும் காப்பி என்கிறார்கள். காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - சவுண்ட் ஆஃப் மியூசிக் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இதேபோல் தைப்பொங்கல் படத்தில் வரும் " கண் மலர்களின்" என்ற பாடல் அப்பா'ஸ் - Money money money பாடலின் காப்பி என்கிறார்கள்.
இந்திபாட்டின் ஆதிக்கத்தை தமிழ் நாட்டில் இளையராஜா தடுத்தாரு சிலர் கூறுவார்கள்..
— குருவி (@Kuruvikuru5017) April 16, 2025
இப்போதுதான் புரிகிறது
இந்தி பாட்ட பூரம் அடிச்சு தமிழ் ல போட்டுட்டு இருந்தாருகாருனு 🤗 https://t.co/hwC84pn46U pic.twitter.com/D6EIvlUCBi
இதேபோல் கல்யாண ராமன் படத்தில் வரும்- காதல் வந்திருச்சு பாடல் உரியா ஹீப் - Lady in Black என்ற பாடலின் காப்பி என்கிறார்கள். இதேபோல் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் வரும் கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் உப்கார் மூவிலியிருலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று விமர்சிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 15 பாடல்களை நெட்டின்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.இது தொடர்பாக வீடியோவும் வெளியிட்டிருக்கிறார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications