கியரை மாற்றும் திமுக.. கையசைத்த முதல்வர் ஸ்டாலின்.. ஒரே உத்தரவுதான்.. அப்படியே திகைத்த அதிமுக, பாஜக

முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு புது உத்தரவு போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் நிறைய மாறுதல்கள் தென்பட்டு வருகின்றன.. அத்தகைய மாறுதல்கள் அனைத்துமே முன்னேற்றத்துக்கான நல்வழியாகவும், சுமூக போக்குக்கு அடித்தளமிடுவதாகவும், பிற கட்சியினரே ஆச்சரியப்பட்டு பாராட்டும் வகையிலும், அமைந்து வருகின்றன.. அதில் ஒன்றுதான் தற்போதைய சட்டப்பேரவை நிகழ்வுகளும்..!

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.. புளியந்தோப்பு கட்டிட விவகாரம், கொடநாடு விவகாரம் என அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக சிக்கி உள்ளது..

ஏற்கனவே மாஜிக்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ள நிலையில், மேலும் சில மாஜிக்கள், கோர்ட் உதவியையும், வக்கீல்கள் குழுவின் உதவியையும் நாடி வந்து கொண்டிருக்கிறார்கள்..

 சட்டசபை

சட்டசபை

இப்படி அதிமுக ஒருபக்கம் பிஸியாக இருந்தால், திமுக தரப்போ வேறு விதமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் சில உத்தரவுகளை பேரவையில் போட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அதாவது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்யவேண்டாம் என்று சட்டசபையிலேயே உத்தரவு போட்டாராம் முதல்வர்.

 கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை நடந்தது.. இதில் இரு துறைக்கும் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் பேசி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பதில் கொடுத்தனர்.. கடந்த காலங்களில் துறை ரீதியான மானிய கோரிக்கையின்போது எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள்.. சபையில் விவாதம் செய்ய முடியாத அளவுக்கு கூச்சல் குழப்பம் உண்டு செய்து, உரிமையை மறுப்பார்கள்... இதுதான் வழக்கமாக நடைபெற்று வந்தது.

 எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

உதாரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நடைபெற்ற ஆட்சியில், மானிய கோரிக்கையின்போது திமுக எம்எல்ஏக்கள் விவாதத்தை துவங்கினாலே போதும், அடுத்த வினாடியே பெஞ்சை தட்டி சத்தம் போட்டு திமுக தரப்பு பேசுவதை மறித்து விடுவார்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்... இதனால் தாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை கூட, அதிமுக ஆட்சி அதை கேட்க தயாராக இல்லை..

 கண்டிப்பு

கண்டிப்பு

எம்எல்ஏக்கள் இப்படி சத்தம் போட்டு, திமுகவினரை பேசவிடாமல் செய்வதை, சம்பந்தப்பட்ட அதிமுக அமைச்சர்களும் கவனிப்பார்கள்.. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் படித்துக்கொண்டிருப்பார்கள்.. தங்கள் எம்எல்ஏக்களை கண்டிக்கவும் மாட்டார்கள்.. கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த கோபத்தில் திமுக எம்எல்ஏக்கள் பலமுறை வெளிநடப்பு செய்தது உண்டு.

 உத்தரவு

உத்தரவு

இதைதான் முதல்வர் ஸ்டாலின் உடைத்துள்ளார்.. இனிவரும் காலங்களில் அப்படி இருக்கக்கூடாது என்று முடிவு செய்த முதல்வர், சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் ஒரு உத்தரவு போட்டிருந்தார்... ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முன்பேயே, தங்கள் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

 பிரச்சனைகள்

பிரச்சனைகள்

"எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில், தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கையில் அனைத்து குறிப்புகளையும் வைத்திருக்க வேண்டும்.. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எந்த பிரச்சனைகளை தெரிவித்தாலும், அந்த தொகுதி குறித்த முழு விவரங்களை அமைச்சர்களுக்கும் கையில் புள்ளிவிவரங்களுடன் வைத்திருக்க வேண்டும், யார் கேள்வி கேட்டாலும் அதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும்" என்று கூறியிருந்தார்.

 கண்டிப்பு

கண்டிப்பு

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமில்லை, எந்த கட்சி எம்எல்ஏக்கள், கேள்விகளை அவையில் கேட்டாலும் அதை தட்டிக்கழிக்காமல் விளக்கம் தர வேண்டும், யாருக்காகவும், எதற்காகவும் அவையில் பேசாமலோ, கேள்வி எழுப்பாமலோ இருந்துவிட கூடாது என்று கண்டிப்புடன் ஸ்டாலின் சொல்லியிருந்தார்.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அதுமட்டுமல்ல, எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ஒவ்வொரு முறையும் அவையில் நடந்து கொள்வதையும், தங்கள் தொகுதிகளில் காட்டும் அக்கறையையும் பார்த்து, 5 வருடங்களையும் கடந்து அடுத்த முறையும் திமுகவே ஆட்சி பிடிக்கும் என்று மக்கள் நினைக்கும் வகையில் திறன்பட செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த சமயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்..

 வேலுமணி

வேலுமணி

இதைதான் நேற்றைய தினமும் அறிவுறுத்தினார்.. நேற்றைய தினம் நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில், திமுக எம்எல்ஏக்கள் உட்பட 8 எம்எல்ஏக்கள் பேசினார்கள். அதில் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி பேசும்போது, "எங்கள் ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகிறது... அம்மா உணவகங்கள் தொடரவேண்டும், கோவையில் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது" என்றார்.

 நேரு

நேரு

வேலுமணி இப்படி பேசி கொண்டிருக்கும்போதே, அமைச்சர் நேரு குறுக்கிட்டு பேச துவங்கினார்.. இதை கவனித்த ஸ்டாலின், தன்னுடைய கை அசைவால் நேருவை உட்கார சொன்னார்... அதை புரிந்து கொண்ட அமைச்சர் நேருவும், என் முடிவில் சரியான பதில் தருகிறேன் என்று சொல்லி உட்கார்ந்து விட்டார்.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மைக் பிடித்து, "எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசவேண்டாம்... அவர்களை முழுமையாக பேசவிடுங்கள்... கடைசியாக விளக்கம் சொல்லுங்கள்" என்றபோது, அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாருமே திகைத்து போய்விட்டார்கள்.. சட்டமன்றத்தில் முதல்வர் வெளிப்படையாகப் பேசியதை அதிமுக மட்டும் அல்ல பாஜக உறுப்பினர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+