புனித வெள்ளி... சிலுவை சுமந்த இயேசு - உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுவதாக புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video
பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் நோன்பு தினமாக ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

புனித வெள்ளி
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளே புனித வெள்ளி. அந்த வகையில் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இன்று கிறித்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என பலவிதமாக அனுசரிக்கப்படுகிறது.

40 நாட்கள் தவக்காலம்
மார்ச் 2ஆம் தேதி சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் ஒரு சந்தி நோன்பு அனுசரித்து வருகின்றார்கள். இன்று முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்தனையில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடந்தது. அப்போது சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான கிறித்தவர்கள் குருத்தோலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

புனித வியாழன்
புனித வாரத்தின் 2வது நிகழ்வாக, புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் தமது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக இது அனுசரிக்கப்பட்டது. பல தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகள்
இன்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சாந்தோம், பெசன்ட்நகர், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிலுவை பாதையும் நடைபெற்றது.

உயிர்த்தெழும் இறைவன்
இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications