Thulam: துலாம் ராசிக்கு இந்த வாரம் அதிரடி மாற்றம்.. சர்ப்ரைஸ் காத்திருக்குது
Thulam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் ஏற்படும் இடமாற்றம் நல்ல சந்தோஷங்களை ஏற்படுத்தும். பழைய கடன்களை கட்டி முடிக்கும் யோகம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வாக்குகளை காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டம். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.
ஜாக்பாட் உறுதி
ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் 3 கிரகம் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். வெளியூர், வெளிநாடு, தூர தேச பயணம் ஏற்படும். லாபம், சந்தோஷம் ஏற்படும் காலகட்டம். நல்ல பண வரவு உண்டாகும். இந்த வாரம் முழுக்க நன்றாக இருக்கும். முதுகு தண்டுவடம், இடுப்பு, பின்பகுதி பாதிப்புகளில் கவனம் தேவை. வண்டிகளில் செல்லும்போது பின்புறத்தில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
100க்கு 100 மார்க்
7 ஆம் இடத்தில் செவ்வாய் பலமாக இருப்பதால் அரசு பதவி கிடைக்கும். அரசாங்கம், அரசியலில் இருப்பவர்களுக்கு யோகம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 100க்கு 100 மதிப்பெண் கிடைக்கும் காலகட்டம். செல்வாக்கு கூடும் நல்ல காலகட்டம். துர்க்கை வழிபாடு சகல வித முன்னேற்றங்களைத் தரும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
வழிபாடு
இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்பட அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது தைரியம், சந்தோஷத்தை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
