விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா'.. ஆடியோ லான்ச்சுக்கு முதலமைச்சர் வருகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா' பட வேலைகள் தீவிரமடைந்து வருகின்றன.. தாத்தா மற்றும் தந்தையின் அடையாளங்களை சாராமல் தனித்து நிற்கும் சஞ்சய், தன்னுடைய முதல் போஸ்டரில் அப்பாவின் இனிஷியலைத் தவிர்த்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்கனவே கிளப்பியிருந்தது.. விரைவில் நடைபெறவுள்ள சிக்மா படத்தின் ஆடியோ ரிலீசுக்கு, விஜய் வருவாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் விரிவாகவே தெரிவித்துள்ளார்.

tbC TN என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஜேசன் சஞ்சய் தனது அப்பா மற்றும் தாத்தாவின் பெயரையோ அடையாளத்தையோ பயன்படுத்தாமல், சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு சுயமுயற்சி கொண்ட இளைஞராகப் பார்க்கப்படுகிறார்.

Jason Sanjay

ஜேசன் சஞ்சய் முதல் படம்

விஜய் சாருடைய பையன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படம் வருகிற ஜூலை 31ம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. ஒரு செலிபிரிட்டியோட மகன், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர், மிகப்பெரிய ஸ்டாரான விஜய் சாருடைய பையன் என்பதால் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான டீசரைப் பார்க்கும்போது நல்லா, டிஃபரண்டாக இருக்கிறது. இன்னைக்கு இருக்கிற எங்ஸ்டர்ஸ் தாட்ஸ் எல்லாம் ரொம்ப டிஃபரண்டாக இருக்கிறது. சஞ்சய் நினைத்திருந்தால் யாரை வேணாலும் ஹீரோவாகப் போட்டிருக்க முடியும், ஆனால் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை ஹீரோவாகப் போட்டிருக்கிறார். படத்தின் மேல எதிர்பார்ப்பு உருவானதற்கு மிக முக்கியக் காரணம் அவர் விஜயோட மகன் என்பதால்தான்.

சிக்மா படம் எப்படி இருக்கும்

விஜய் சார் ஆடியோ லான்ச் போகும்போது குட்டி கதை சொல்வது, வைபாக இருப்பது எல்லாமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பொதுவாக விஜய் அமைதியான பர்சனாலிட்டி, ரொம்ப ரிசர்வ்டாக இருப்பார்.

ஜேசன் சஞ்சய்யும் சைலண்ட்டாக, ஆர்ப்பாட்டம் இல்லாத நபராக உள்ளார்.. ஏர்போர்ட்டில் சஞ்சய் வருவது, ஸ்மைல் பண்ணுவது மற்றும் சிக்மா படத்தின் ஒர்க்கிங் ஸ்டில் வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் அப்படித்தான் தெரிகிறமுத.- திருமண விழாக்களில் கூட அவருடைய காஸ்டியூம்ஸ் விஜய் சாரைப் போலவே ரொம்ப சிம்ப்ளிஃபைடாக இருக்கிறது.

எப்போதுமே மீடியாக்களின் கேள்விகளுக்கு விஜய் சார் நடிகராக இருக்கும்போதே பதில் சொல்வதில்லை, இப்போது முதலமைச்சர் ஆன பிறகும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.. ஆனால் ஜெசன் சஞ்சய் முதல் படம் பண்ணியிருப்பதால் ஒரு டைரக்டராக அவர் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார், ஆனால் பர்சனல் கேள்விகளை நாகரிகமான முறையில் தவிர்த்துவிடுவார் என்று நான் நினைக்கிறேன்.

விஜய் மகன் எடுத்த முடிவு

ஜேசன் சஞ்சய் சினிமா பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் தயாரிப்பு, இயக்கம் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கும். முன்னணி இயக்குனர்கள் பலர் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்த அப்ரோச் செய்தபோது, தனக்கு நடிப்பதை விட டைரக்ட் செய்வதில் ஆர்வம் அதிகம் என்று சஞ்சய் சொல்லிவிட்டாராம்.

சஞ்சய் மட்டும் நடிகராக இருந்தால், அவருக்கு ஒத்துழைக்க பல பேர் இருப்பார்கள், நடிப்பு என்பது வேறு, டைரக்ஷன் என்பது வேறு.. டைரக்டர் என்பவர் ஒரு கிரியேட்டர்.. இயக்குனர்தான் 24 கிராஃப்ட்ஸ்க்கும் தலைவராக இருந்து எல்லாரையும் கண்ட்ரோல் பண்ண வேண்டும். ஒரு நடிகரையே இயக்குனர் தான் உருவாக்குகிறார். 26 வயதே ஆகும் ஜேசன் சஞ்சய் தனக்குள் இருக்கும் ஐடியாலஜியை ஸ்கிரீனில் கொண்டுவர சிக்மா படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

அஜித் முன்வந்து செய்த உதவி

படத்தின் முதல் போஸ்டரில் ஜேசன் சஞ்சய் அவங்க அம்மா 'S' என்றுதான் போட்டிருந்தது, அப்பா பெயர் ஜோசப் விஜய் என்ற இனிஷியல் இல்லை. இதற்கு காரணம், அப்பா பெயரை பயன்படுத்தாமல், சொந்த திறமை வைத்து அடையாளத்தை பதிவு செய்ய நினைக்கிறார்.

முதன்முதலில் சஞ்சய், கதையை ரெடி செய்துவிட்டு பெரிய பேனர்களை அப்ரோச் பண்ணியபோது பல தடைகள் இருந்ததாம்.. இந்த தகவல் அஜித் சாருக்கு சொல்லப்பட்டபோது, உடனடியாக ஜேசன் சஞ்சய்யை வரச்சொல்லிப் பேசி என்கரேஜ் செய்துள்ளார்..

அதுமட்டுமல்லாமல் உடனே லைக்கா சுபாஸ்கரனுக்கு போன் செய்துள்ளார் அஜித். "சஞ்சய் நல்ல கதை வைத்திருக்கிறார், நம்பி பண்ணுங்க, நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்" என்று சிபாரிசு செய்தாராம்.. விஜய் தன்னுடைய நண்பர் என்பதால் அஜித் இந்த இன்ட்ரஸ்ட் எடுத்துள்ளார்..

ஆடியோ லான்ச்சுக்கு விஜய் வருவாரா

அஜித் சார் தன்னுடைய சொந்தப் படங்களின் ஆடியோ ரிலீஸ்க்கே போவதில்லை என்ற பாலிசி வைத்துள்ளார், எனவே, ஜேசன் சஞ்சய் ஆடியோ ரிலீசுக்கும் அஜித் வரமாட்டார் என்றே தெரிகிறது.. ஆனால் ஷாலினி மேடம் வர வாய்ப்பிருக்கிறது.

அதேபோல விஜய் சாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படும், மகன் தனியாக வரட்டும் என்று ஒதுங்கி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது, அல்லது வரவும் வாய்ப்பிருக்கிறது.

சஞ்சய் மீது பிரஷர்

மொத்தத்தில் விஜய்யின் மகன், தாத்தா டைரக்டர், அஜித் ரெக்கமண்ட் பண்ணி லைக்கா தயாரிப்பு என்பதால் சஞ்சய் மேல் ஒரு பிரஷர் இருக்கிறது. லவ் டுடே போன்ற இளைஞர்களுக்கான படங்கள் புது மாதிரியான கதைகளோடு ஜெயித்து வருகின்றன. சஞ்சய்யும் ஒரு இளைஞர் என்பதால் அவருடைய ஐடியாலஜியும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

யாரை வேண்டுமானாலும் தன் படத்துக்கு ஹீரோவாக சஞ்சய் நடிக்க வைத்திருக்க முடியும்.. ஆனால், பிரபலமான நடிகர் வேணுமா அல்லது கதைக்குத் தேவையான நாயகன் வேணுமா என்று பார்த்து தெலுங்கில் சந்தீப் கிஷனை சூஸ் பண்ணியிருக்கிறார். நல்ல படங்கள் கொடுத்தால் மக்கள் பார்ப்பார்கள், சிக்மா படம் ஆடியன்ஸ்க்குப் பிடித்த மாதிரி இருந்தால் நிச்சயம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனைக் கொடுக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+