எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. அவர் சொன்னதைத்தான் செய்கிறேன்! விஷ்ணு விஷால் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ஜூலை 3-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால் பேசிய ஒரு விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய விஷ்ணு விஷால், "தலைவரே தனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்கி, பின்னர் அதற்கே விளக்கம் கேட்பது வருத்தமாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

விஜய் ரசிகர்கள்

அந்த பேட்டியில் அவர், ரஜினிகாந்த் பேசியதை மேற்கோள் காட்டும்போது "விஜய்" என்றே குறிப்பிட்டிருந்தார். இதைத்தான் சில விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். "தமிழக முதல்வரை 'விஜய்' என்று பெயரை மட்டும் சொல்லலாமா? 'விஜய் சார்' என்று மரியாதையுடன் கூறியிருக்க வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், 'கட்டா குஸ்தி 2' பட விழாவில் அதற்கான விளக்கத்தை விஷ்ணு விஷால் நேரடியாக அளித்தார். அப்போது அவர், "நான் ரஜினி சார் பேசியதை அப்படியே தான் கூறினேன். அவர் 'விஜய்' என்று சொன்னதை மாற்றி நான் வேறு விதமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரஜினி சார் கூறிய கருத்தை மட்டுமே நான் பகிர்ந்தேன். அதில் யாரையும் அவமதிக்கும் நோக்கமோ, மரியாதை குறைக்கும் எண்ணமோ இல்லை" என்றார்.

Vishnu Vishal Gatta Kusthi Vijay Rajinikanth

விஷ்ணு விஷால் விளக்கம்

மேலும், "தலைவரை மட்டும் 'தலைவர்' என்று சொல்கிறீர்கள், ஆனால் விஜய் சாரை 'விஜய் சார்' என்று ஏன் சொல்லவில்லை என்று பலர் கேட்கிறார்கள். உண்மையில் எனக்கும் விஜய் சாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவிட்டியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று விஜய் சாரே பலமுறை கூறியிருக்கிறார். நானும் அதையே நம்புகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது, சமீபத்தில் 'தர்மன்' திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் அளித்த பேச்சுதான். அப்போது அவர், "என்னைப் பற்றியும், விஜயைப் பற்றியும் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் அமைதியாக இருந்தாலும் பேசுகிறார்கள்; பேசினாலும் பிரச்சனையாக்குகிறார்கள்" என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.

அந்த விளக்கத்திற்கே ஆதரவாக விஷ்ணு விஷால் தனது கருத்தை தெரிவித்திருந்தாலும், அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இதற்கிடையில், "ஒரு நடிகருக்கு 'தலைவர்' என்று மரியாதை கொடுக்கும் விஷ்ணு விஷால், தமிழக முதல்வரான விஜயை பெயரை மட்டும் சொல்லலாமா?" என்ற கேள்வியையும் விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மறுபுறம், "ரஜினி பேசியதை அப்படியே மேற்கோள் காட்டியதற்காகவே விஷ்ணு விஷால் தேவையில்லாமல் விமர்சிக்கப்படுகிறார்" என்று அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ஒரு சாதாரண விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+