வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. விதிகள் அடியோடு மாறியது.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும் உடனடியாக கட்டிட அனுமதி அடுத்த நொடி வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக 7 மீட்டர் உயரம் வரை அரசு அனுமதி தந்தது. ஆனால் இப்போது இனி சுயசான்றிதழ் முறையில் 2 மாடி கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்குகிறது.
தமிழ்நாட்டில் கட்டிடம் கட்ட அனுமதி பெற சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் புகார் எழுந்தது.இதையடுத்து தமிழக அரசு 2,500 சதுர அடி நிலப்பரப்புக்குள், 3,500 சதுர அடி வரையிலான கட்டுமானப் பரப்பளவு, மற்றும் 7 மீட்டருக்குள் உயரம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் அனுமதி அளக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சுயசான்றிதழ் அனுமதி எப்படி வழங்கப்படுகிறது
வீடு மற்றும் கட்டிடம் கட்டுவோர், விண்ணப்பிக்கும் போது, தங்கள் நில ஆவணங்கள், கட்டட வரைபடங்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை என அவர்கள் சுய சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்தஒரு சில நொடிகளில் அனுமதி கிடைத்துவிடும்.
ஒரு லட்சம் பேருக்கு அனுமதி
அதேநேரம் சுயசான்றிதழ் கொடுத்து, அதன்மூலம் பெற்ற அனுமதியில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் இது கடந்த ஆண்டு முறையில் நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையின் கீழ் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி பெற்றுள்ளார்கள்.
விதிகள் தளர்வு
இந்த முறையில் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக 7 மீட்டர் உயரத்தை 10 மீட்டர் உயரத்துக்கும், ஒரு தளம் என்பதனை அதிகபட்சமாக 2 தளம் என்றும் விதிகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
சுயசான்றிதழ் முறையில் அனுமதி
இதுதொடர்பாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது.
10 மீட்டர் கட்டிடம் (2 மாடி வீடு)
வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் 2 தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இனி சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்படும். அதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிட உயரம் 7 மீட்டரில் இருந்த 10 மீட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications