ஹோட்டலுக்கு சாப்பிட, ஆர்டர் பண்ண போறீங்களா.. தக்காளியால் வந்த குட் நியூஸ்.. அடியோடு மாறிடுச்சே!
சென்னை: தக்காளி விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி உள்ளது. தக்காளி விலையுடன் சேர்த்து பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் சரிய தொடங்கி உள்ளது.
கடந்த 3 வாரமாக இந்தியா முழுக்க அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வந்தது. முக்கியமாக வெங்காயம், தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

தக்காளி விலை உயர்விற்கு நிறைய காரணங்கள் உள்ளன. போதுமான உற்பத்தி இல்லை, மழை காரணமாக தக்காளிகள் அழுகியது, மழையால் போக்குவரத்து தடை பட்டு தக்காளி விலை உயர்ந்தது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுவாக உயரும் பணவீக்கம், மக்கள் அச்சம் காரணமாக அதிக அளவு தக்காளிகளை வாங்கியது ஆகியவை தக்காளி விலை உயர்விற்கு காரணமாக அமைந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹150 என்ற விலையில், தக்காளி சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 20 ரூபாய் குறைந்து 130 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி நேற்று வரை ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தக்காளியின் விலை தற்போது சட்டென சரிய தொடங்கி உள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழே குறைந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைவு காரணமாக உணவு பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக ஹோட்டல்களில் தற்காலிகமாக உயர்த்தப்பட்ட தக்காளி சார்ந்த உணவு வகைகள் எல்லாம் மீண்டும் விலை சரியும் வாய்ப்புகள் உள்ளன.
பல இடங்களில் பொருட்களின் விலை உயர்வால் ஹோட்டல்களில் விலை ஏற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி விலை மட்டுமின்றி மற்ற அடிப்படை பொருட்களின் விலையும் சரிவதால் உணவு பொருட்களின் விலை குறையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
பின்வரும் பொருட்களின் விலையும் சட்டென சரிந்துள்ளது.
•இஞ்சி -≈230
• பூண்டு -200
• வண்ண குடமிளகாய் -180
• சின்ன வெங்காயம் - 170
• நவீன் தக்காளி 120
• தக்காளி -90
• பீன்ஸ் -80
•பச்சைகுடமிளகாய் -70
•பச்சை மிளகாய் -65
• வாழைதண்டு -60
• ஊட்டி கேரட் - 50
• காராமணி -50
•பாவக்காய் 50
• அவரைக்காய் -50
• சேனைக்கிழங்கு -45
• பீர்க்கங்காய் -45
• எலுமிச்சை -40
• பீட்ரூட் -40
• முருங்ககாய் -40
• வெண்டைக்காய் -35
• உஜாலா கத்திரிக்காய் -35
• சேமகிழங்கு -35
• கொத்தவரங்காய் -30
• உருளை - 20
• தேங்காய் - 27
• வெங்காயம் - 22 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலையும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications