தென் சென்னைக்கே நல்ல செய்தி.. இனி 3 கிமீ சுற்றி செல்ல தேவையில்லை.. ரெடியானது பாலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவிலம்பாக்கம்-மடிப்பாக்கம் இடையேயான கால்வாய் பாலப்பணிகள் முடிந்துள்ளது. இனி 3 கிலோமீட்டர் தூரம் சுற்றிசெல்ல வேண்டியதில்லை. சென்னையில் மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளக்கரணை, கோவிலம்பாக்கம், ரேடியல் ரோடு பகுதி மக்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தி தான்.

சென்னை கோவிலம்பாக்கம்- - மடிப்பாக்கம் இடையே பிரதான வழித்தடமாக டாக்டர் அம்பேத்கர் சாலை உள்ளது. நாராயணபுரம் ஏரி அருகே உள்ளபோக்கு கால்வாய் பாலம் மிகச்சிறியது. இந்நிலையில் மேடவாக்கத்தில் இருந்து, மவுன்ட் - மேடவாக்கம் சாலை, தாம்பரம் - -வேளச்சேரி சாலை வழியாக ஆலந்துார், ஜி.எஸ்.டி., சாலையை அடைய கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதி மக்கள் இந்த பாலத்தை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

good news for south chennai : Kovilambakkam-Madipakkam people no longer have to travel 3 km

இதுதவிர மேடவாக்கத்தில் இருந்து வடக்குப்பட்டு, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், உள்ளகரம், ஆதம்பாக்கம் செல்லவும் அம்பேத்கர் சாலையில் உள்ள பாலம் பெரிய அளவில் உதவியது. ஏனெனில் இந்த பாதையில் சென்றால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விரைவாக சென்றுவிட முடியும்.

கோவிலம்பாக்கம் - மடிப்பாக்கம் பகுதியை இணைத்து வந்த பாலத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடிப்பாக்கம் சென்றார்கள். அதேபோல, சென்னை புறநகரில் பல்வேறு பகுதிகளுக்கு ரேடியல் சாலை வழியாக ஏராளமானோர் சென்று வந்தார்கள். இந்நிலையில் கோவிலம்பாக்கம் பாலத்தின் மீது உபரிநீர் வெளியேறி ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பாய்ந்ததோடும். இதையடுத்து புதிய மேம்பாலம் அமைத்து, கால்வாயை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு அகற்றப்பட்டது.

good news for south chennai : Kovilambakkam-Madipakkam people no longer have to travel 3 km

ரேடியல் சாலையில் இருந்து கோவிலம்பாக்கம் எல்லை வரை மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்க திட்டமிட்டார்கள்.அதற்காக, 4.77 கோடி ரூபாய் மதிப்பில், 15 மாதங்களில் சாலை, புதிய பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதையடுத்து, பழைய பாலம் அகற்றப்பட்டது. ஒப்பந்தம் விட்டு சில மாதங்கள் பாலப் பணி துவக்கப்படாமல் இருந்தது.

good news for south chennai : Kovilambakkam-Madipakkam people no longer have to travel 3 km

இந்நிலையில் பாலப் பணிகள், மந்த கதியில் நடந்து வந்த நிலையில், போக்குவரத்து வசதியின்றி கோவிலம்பாக்கம் - -மடிப்பாக்கம் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் இப்பாலப் பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக கடந்த ஓராண்டாக நடந்தது. தற்போது பால பணிகள் முடிந்துவிட்டன.இன்னும் தார் சாலை அமைப்பது. ஏரியின் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள மண்களை அகற்றுவது ஆகிய பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது.

இந்த பணிகள் முடிந்தால் எல்லா வாகனங்களும் எளிதாக சென்று வர முடியும். கோவிலம்பாக்கம் - -மடிப்பாக்கம் போக்கு கால்வாய் பாலத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டும் செல்லும் வகையில் தற்காலிகமாக வழியை ஏற்படுத்தி உள்ளனர். பணிகள் முடிந்தால் லாரிகளும் , பேருந்துகளும் எளிதாக 200 அடி சாலையை அடைய முடியும். இதன் மூலம் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய தேவை இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+