தங்கமான அறிவிப்பு.. தமிழ்நாட்டில் குதிக்கும் அரசு ஊழியர்கள்.. ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளது.
அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை
அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
அதிரடி உத்தரவு: இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.
அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications