சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.. திருச்செந்தூருக்கு மகிழ்ச்சி.. திடீர் அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன.

பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது.
அதாவது இந்த மின்சார சேவை ரயிலானது திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இதுவரை டீசல் மூலம் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ரயில்கள் இப்போது, மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
அதிரடி அறிவிப்பு: இப்போது இன்னொரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்செந்துார் விரைவு ரயிலானது, சூப்பர் பாஸ்ட் அதாவது, அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
ரயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வரும்நிலையில், ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
"எழும்பூரில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச்செந்துார் செல்லும். இதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில் 40 நிமிடங்கள் முன்னதாகவே செல்லும் மறுமார்க்கமாக திருச்செந்துாரில் இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில், 15 நிமிடங்கள் பயண நேரம் குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இனிமேல், பயண நேரம் 40 நிமிடங்கள் குறையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications