திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி.. சென்னை திரும்புவதும் ரொம்ப ஈஸியாகுது!
சென்னை: சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில், தாம்பரம் - நாகர்கோவில் உள்பட பல்வேறு சிறப்பு ரயில்கள் மே 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்வது, திரும்பவும் சென்னை வருவது என அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள்.இதுதவிர சுற்றுலாவிற்காகவும் பல்வேறு இடங்களுக்கு மக்கள் பயணிப்பார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் கோடைக்காலங்களில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்திருந்து ரயில்வே.. இந்நிலையில் சிறப்பு ரயில்களை மே 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- கேரள மாநிலம் கொச்சுவேலி, சென்டரல்-நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மே 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-06012) மே 5-ந்தேதியில் இருந்து 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06011) மே 6-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (06043) மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (06044) மே 2-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (06019) மே 5-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06020) மே 6-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் (060231) மே 12-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06022) மே 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications