கன்னியாகுமரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழக அரசு அதிரடி.. இந்த 4 மாவட்டத்துக்கும் மழை அறிவிப்பு
இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. இதனிடையே, தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிவிட்டது.. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.. இதை நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அறிக்கை
இதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.. அதில், தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

4 மாவட்டத்துக்கு மழை
1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தென் கிழக்கு அரப்பிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

வெப்ப சலனம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.. ஈரோட்டில் மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.. சிறிது நேரதில் பலத்த மழையாகவும் கொட்டியது.. மழை பெய்தபோது சூறாவளி காற்றும் வீசியது... இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதேபோல நீலகிரி மாவட்டத்திலும் கனத்த மழை பெய்தது..

தமிழக அரசு
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று முதல் 2023 பிப்.2ம் தேதி வரை தினசரி 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications