தமிழகத்தில் கொரோனா.. சுகாதாரத்துறை அறிவிப்பை கவனித்தீர்களா.. ஒரு சூப்பர் நியூஸ் இருக்கு
சென்னை: தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக எடுத்துப் பார்த்தால் இதில் 47 பேர் சென்னையைச் சேர்ந்த நோயாளிகள். இதில் என்ன சூப்பர் நியூஸ் என்கிறீர்களா, சொல்கிறோம் பாருங்கள்.
Recommended Video
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிக்கை சுகாதாரத் துறையால் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1937 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது 1,101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நல்ல விஷயம்
தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 56.8 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. இன்று ஒரே நாளில் 81 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 34, கோவையில் 26 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 8753 தனிநபர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 56 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 570
உயிரிழப்பு விகிதம் என்பது 1.2 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 24 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 33 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள். சென்னையிலிருந்து மற்றும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த நல்ல விஷயம்
நல்ல விஷயம் என்று நாம் குறிப்பிட்ட மற்றொரு மேட்டர் என்னவென்றால், தமிழகத்தில் சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை தவிர வேறு எந்த ஒரு மாவட்டத்திலும் புதிதாக இன்று நோயாளி கண்டறியப்படவில்லை. சென்னையில் 47, மதுரையில் 4, விழுப்புரத்தில் 1 நோயாளி பாதிக்கப்பட்டுள்ளனர். இது நல்ல செய்தி என்றபோதிலும், சென்னை ஒரு கிளஸ்டர் போல மாறி வருகிறது என்பது இதில் உள்ள கெட்ட செய்தியாகும்.

சென்னைக்கு தேவை கட்டுப்பாடு
எனவே சென்னை நகருக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் அவசியம் என்பது இந்தப் புள்ளிவிபரம் சொல்லக்கூடிய பாடம். கடைகள் திறந்ததுமே, மொத்தமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் சென்று காய்கறி போன்ற பொருட்களை வாங்குவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது போலன்றி. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில், வேகமாக இந்த நோய்த்தொற்று ஒழியும் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications