ரேஷன் கார்டிலிருந்து குழந்தைகளின் பெயர்களை நீக்கக் கூடாது.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டு மூலம் அந்தந்த மாநில அரசுகளின் கொள்கையின்படி அவரவர் கார்டுகளின் தகுதிக்கேற்ப இலவசமாகவும் குறைந்த விலையிலும் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ரேஷன் கார்டுகளுக்கு என்னென்ன பொருட்களை வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ஆகும். மேலும் இந்த ரேஷன் கார்டுகளில் அரசு உதவித் தொகையும் கிடைக்கும்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் இலவச கலர் டிவி, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் திட்டம், கொரோனா நிவாரணம், நகைக் கடன் ரத்து, மாதம் ரூ 1000 திட்டம், பொங்கல் பரிசு உள்ளிட்டவை ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கைகேற்ப பொருட்கள் விநியோகத்தில் கூடவோ குறைவாகவோ இருக்கும்.
அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காகவே சிலர் வெவ்வேறு முகவரிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலி ரேஷன் கார்டுகளை நீக்கும் பணிகளை அரசு ஒருபுறம் செய்து வருகிறது. அது போல் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு வெவ்வேறு முகவரியை கொடுத்து பலர் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க ஒரே நபர் பல முகவரியில் ரேஷன் கார்டுகளை வாங்குவதை தடுக்க ஆதார் எண் அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குடும்பத் தலைவர், உறுப்பினர்கள் என அனைவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதில் 5 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இருந்தால் பதிவேற்றம் செய்யலாம். இல்லையெனறால் பிறப்புச் சான்றிதழ் வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் எண் இணைக்காத குழந்தைக்கு 5 வயதுக்கு மேல் ஆனதும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நிலையில் 5 வயதைதாண்டியும் பலர் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.
அவர்களின் பட்டியலை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி ஆதார் எண்ணை பெறுமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த விபரத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தெரிவிக்கவில்லை போலும். அதே நேரம் 5 வயதை தாண்டியும் ஆதார் இணைக்காத குழந்தைகளின் பெயர்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரை அடுத்து ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரிலோ அல்லது செல்போனிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் குழந்தைகளின் பெயரை நீக்கக் கூடாது என்றும் அதே வேளையில் 5 வயதான குழந்தைக்கு பெற்றோரும் ஆதார் எண்ணை பெற்று இணைக்க முன் வரவேண்டும் என்றும் அதிகாரிகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications