"3 ஆயிரமா".. ரேஷன் கடைகளில் மாற்றம்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை சிக்கலுக்கு ஒரு முக்கிய தீர்வை கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

அமைச்சர் அதிரடி
அதேசமயம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

சக்கரபாணி
இப்போது இன்னொரு அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.. விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஆய்வுப்பணி நடந்தது.. பிறகு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.. அப்போது பேசிய சக்கரபாணி, "தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை 2-ஆக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதிநேர புதிய ரேஷன் கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும்.

புதிய அட்டைகள்
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... அதேபோல, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன... உணவுப் பொருள் வழங்கல்துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சர்க்கரை, உளுந்து
இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை கூடிய சீக்கிரம் வழங்கப்படும். பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.. எனவே, கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications