மைக்கை பிடித்த மைதிலி.. "அந்த" ஒரு வார்த்தை.. ஸ்டாலினை திகைக்க வைத்த பாஜக புள்ளிகள்.. 2022-ன் "ஜம்ப்"
2022-ல் தமிழக பாஜகவில் இணைந்தவர்கள், மற்றும் விலகியவர்கள் ஏராளமானோர் உண்டு
சென்னை: தமிழக பாஜகவின் அரசியலை பொறுத்தவரை, இந்த 2022ம் ஆண்டில் மிக முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.. குறிப்பாக பாஜகவில் சிலர் இணைவதும், சிலர் வெளியேறுவதுமான செயல்பாடுகள் நிறையவே நடந்தன.
பொதுவாக பாஜகவின் அரசியல் என்பதே வித்தியாசமானது.. எல்லாரும் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிந்தைய அரசியலையே பிரதானமாக கையில் எடுத்து வருவது இயல்பாகும்.
அதாவது, தேர்தல் சமயத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, தங்கள் பக்கம் இழுப்பது போன்ற சூட்சுமங்களை கையாண்டு, பிரதான கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாமல் போக செய்துவிடும்..

தாவல்கள்
அதன்பிறகு, ஆட்சியில் பங்கு, கூட்டணி என்று விஷயத்துக்கு வந்து நிற்கும். பெரும்பாலான வடமாநிலங்களில் இப்படித்தான் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது என்பதை நாடறியும்.. பாஜக அரசியலின் ஒருவித வியூகம் இதுவென்றாலும், கட்சி தாவல்கள் என்பதும், மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை இழுப்பது என்பதும் பாஜகவின் தவிர்க்க முடியாத வியூகமாகி உள்ளது.. புதுச்சேரியிலும் தேர்தல் சமயத்தில் அதுதான் நடந்தது என்பதை மறுக்க முடியாது.. இப்போது விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. இதற்கான முன்னெடுப்புகளை கடந்த 6 மாத காலமாகவே தமிழக பாஜக மேற்கொண்டு வருகிறது..

வலை வீசியாச்சு
அந்தவகையில் தன்னுடைய கட்சியை பலப்படுத்தி வருகிறது என்றாலும், திராவிட கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்ற யதார்த்தத்தையும் நன்றாகவே உணர்ந்துள்ளது. உண்மையை சொல்லப்போனால், கடந்த வருடத்தை விட இந்த வருடம், தமிழக பாஜக வீறு கொண்டு எழுந்து வருகிறது என்றே சொல்லலாம். இதற்கு முக்கிய காரணம் அதிமுக மட்டுமே.. அதிமுக என்ற பலவீனங்களின் அஸ்திவாரத்தில் பாஜக சுடர்விட்டு பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டது.. மற்றொருபக்கம், அதிருப்தியாளர்களை வலைவீசி தங்கள் பக்கம் இழுத்துள்ளது. அந்தவகையில், சில குறிப்பிடத்தக்க புள்ளிகள், தமிழக பாஜகவுக்கு தாவி உள்ளதை நாம் குறிப்பிட வேண்டி உள்ளது.

திருச்சி சூர்யா
முக்கியமாக, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். திமுகவின் குடும்ப ஆட்சி என்ற சிலந்தி வலையிலிருந்து மீண்டு நமது பாரத பிரதமர் மோடியின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாக காரணத்தை இவர் சொல்லி இருந்தார்.. அடுத்ததாக, திமுகவின் சீனியர் தலைவர் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இணைந்தார்..

கரு.நாகராஜன்
அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷை தாண்டி திருச்சியில் பிரகாசிப்பது கடினம் என்பதை சூர்யா உணர்ந்திருந்தார்.. அதனால்தான் திமுக-விலிருந்து தாவிய வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் தரப்பு சூர்யாவிடம் பேசிய நிலையில், பாஜகவில் இணைந்தார்.. சூர்யாவின் இந்த இணைப்பு, பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், தலைமை மீது அதிருப்தியிலுள்ள நிர்வாகிகள் மத்தியில் சின்ன தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றே அரசியல் வட்டாரத்தில் கருதப்பட்டது..

அர்ஜூனமூர்த்தி
அதேபோல, ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்று அறியப்பட்ட, அர்ஜுன மூர்த்தியும் பாஜகவில் இணைந்தார்.. பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் இருந்து விலகி, ரஜினி தொடங்கும் புதிய கட்சியில் இணைய தயாராகினார்.. பிறகு, அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நிலையில், அந்த கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.. இதன்மூலம் ரஜினி ரசிகர்களை பாஜக பக்கம் கொண்டுவர இவர் முயலுவார் என்று நம்பப்படுகிறது.

மைதிலி வினோ
இன்னும் இதுபோல் எண்ணற்றவர்களை பாஜக தன் பக்கம் இழுத்து வந்தாலும், பாஜகவில் இருந்து திமுக பக்கம் வந்தவர்களையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கோவையை சேர்ந்த மைதிலி வினோ என்பவர் பாஜகவில் 22 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்.. மகளிரணியின் முன்னாள் மாநில செயலாளரும்கூட.. மாவட்ட பொறுப்புகளிலும் இருந்து வந்தவர்.. ஆனால், பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலை உள்ளதை சுட்டிக்காட்டி, திமுகவில் வந்து இணைந்துவிட்டார்.

தண்ணீர்
தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் நாங்கள்.. ஆனால், மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்று ஒரு சாபத்தையும் மைதிலி விடுத்திருந்தார்.. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை மைதிலி வெளிப்படையாக முன்வைத்தாலும், இதற்கு பின்னணியில் செந்தில் பாலாஜியின் அரசியலை கண்டு கோவை பாஜக பொருமியது. அதுமட்டுமல்ல, கட்சியில் இணைந்த முதல்நாள், ஸ்டாலின் முன்னிலையில் மைதிலி பேசிய பேச்சு இணையத்தை ஆக்கிரமித்தது..

ஒரே சூரியன்
"தளபதி ஐயா அனுமதியுடன்".. என்று சொல்லிவிட்டு பேச்சை துவங்கிய மைதிலி, "ஐயா, நான் கடந்த 1999-ல் பாஜகவில் இணைந்தேன்.. அப்போது நான் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர்.. என்னுடைய கடின உழைப்பால் இந்த பதவியை பெற்றேன்... ஆனால், கடந்த ஒரு வருட காலமாக பாஜகவில் பணம் கொழுத்தவர்களுக்கே பதவி என்று மாறிவிட்டது.. ஐயா, உலகத்திற்கு எப்படி ஒரு சூரியனோ, இனிமேல் தமிழ்நாட்டுக்கு ஒரு உதயசூரியன் மட்டும்தான்" என்று மைதிலி பேசியதை பாஜகவே மிரண்டு போய் பார்த்தது.
இந்த லிஸ்ட்டில் மதுரை டாக்டர் சரவணனையும் சேர்த்து கொள்ளலாம்.. மதிமுக டூ திமுக டூ பாஜக டூ திமுக என ஒரு ரவுண்டு அடித்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே பாஜகவில் தேர்தலில் போட்டியிட சீட் தந்தாலும், எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், வேறு சில அதிருப்தியாலும் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார் சரவணன்.. விரைவில் திமுக பக்கம் தாவும் வாய்ப்பும் இவருக்கு உள்ளது.

திமுக
அதேபோல, மூத்த தலைவர் கு.க.செல்வம், திமுக மீது கோபித்து கொண்டு பாஜக பக்கம் போனார்.. ஆனால் ஏனோ, அரசியல் முதிர்ச்சி உடைய குக செல்வத்தை பாஜக சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்கிறார்கள்.. செல்வமும் பாஜக போனதில் இருந்தே அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.. 2 நாட்களுக்கு முன்பு திமுகவுக்கு வந்துவிட்டார்.. திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் அன்று பதவி வகித்த நிலையில், மீண்டும் திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி பாஜகவில் இருந்து திமுகவுக்கும், திமுகவில் இருந்து பாஜகவுக்கும் பலர் தாவிய நிலையில், இந்த 2022-ன் அரசியல் பல்வேறு அதிர்வுகளை உண்டுபண்ணிவிட்டது என்றே சொல்லலாம்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications