கூகுள் தந்த வார்னிங்.. செப்.,20க்குள் இதை செய்யுங்க! இல்லைனா ஜி மெயில் அக்கவுண்ட் டெலிட் ஆகிடுமாம்
சென்னை: உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள பல கோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகளை செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் உங்களின் ஜி-மெயில் அக்கவுண்ட் கூட இருக்கலாம். இதனால் செப்டம்பர் 20ம் தேதிக்குள் இந்த முக்கிய விஷயத்தை செய்தால் ஜி-மெயில் அக்கவுண்ட்டை கூகுள் நீக்குவதை தடுத்து விடலாம்.
தற்போது நாம் அனைவருமே இ-மெயில் (Gmail) பயன்படுத்தி வருகிறோம். தற்போது பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி இ-மெயில் பயன்படுத்தி வருகிறோம். கல்லூரி மற்றும் பணி இடங்களில் இந்த ஜி-மெயில் என்பது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.

இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜி-மெயிலில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பலரும் தங்களின் ஜி-மெயில் முகவரியை பயன்படுத்துவது இல்லை. அதேபோல் இறந்தவர்களின் ஜி-மெயில் முகவரியும் அப்படியே இருக்கும்.
இது ஜி-மெயில் சேவையை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் சர்வரில் அதிக இடத்தை பிடித்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஜி-மெயில் சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்பட்டு வரும். அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு உலகம் முழுவதும் பலகோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகள் டெலிட் செய்யப்பட உள்ளன.
அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பணி என்பது வரும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ளது. மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது.
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் நமது ஜி-மெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். அதாவது கடந்த 2 ஆண்டுகளாக நாம் ஜி-மெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட இப்போது உடனே அதனை பயன்படுத்தி வந்துள்ள மெயிலை படித்தால் போதும். இல்லாவிட்டால் அந்த ஜி-மெயில் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு ஜி-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினால் போதும். இப்படி செய்யும்பட்சத்தில் நமது ஜி-மெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications