Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி துறைக்கு ஆபத்து.. கொத்து கொத்தாக நீக்கப்படும் ஊழியர்கள்.. என்ன காரணம்? டேட்டா பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாம். அதோடு 2025ம் ஆண்டில் இதுவரை ஒரு நாளைக்கு சராசரியாக 439 பேர் என்று மொத்தம் 45,656 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் காலத்திலும் இந்த பணி நீக்க நடவடிக்கை தொடரும் என்றும், அதற்கான பின்னணி காரணம் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது பலரும் ஐடி துறையில் கால்பதித்து கைநிறைய சம்பாதிக்க விருப்பம் கொள்கின்றனர். ஐடி துறையை எடுத்து கொண்டால் ஒரு சில ஆண்டுகள் பீக்கில் இருக்கும். சில நேரங்களில் பெரும் சரிவை சந்திக்கும். தற்போது ஐடி துறை என்பது நல்ல நிலையில் தான் உள்ளது.

google-microsoft-and-some-other-it-companies-starts-their-layoffs-in-2025

ஆனாலும் சில நிறுவனங்கள் பணியாளர்களை அதிரடியாக நீக்கி வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு நிலைமை சரியாகும் என்று எண்ணியவர்களுக்கு தற்போது அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த ஆண்டை போலவே நடப்பு 2025ம் ஆண்டிலும் ஐடி துறையில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களாக உள்ள கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஆட்டோமேஷன், ஏஐ மற்றும் காஸ்ட் எபிசியன்ஸி உள்ளிட்டவை தான் ஊழியர்களின் பணி நீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக லேஆஃப் டிராக்கிங் பிளாட்பார்ம் ட்ரூஅப்(Trueup) முக்கிய டேட்டாவை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛நடப்பு ஆண்டில் ‛டெக்' துறையில் 234 லேஆஃப்கள் பதிவாகி உள்ளது. இதன்மூலம் மொத்தம 45,656 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக பார்த்தால் நாள் ஒன்றுக்கு 439 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் 1,15 லேஆஃப்கள் நடந்தது. இதில் மொத்தம் 2 லட்ச்து 38 ஆயிரத்து 461 ஊழியர்கள் வேலையை இழந்தனர். அதாவது ஒரு நாளைக்க 653 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு ஐடி துறையில் ஏஐ மற்றும் கிளவட் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பது தான் காரணமாக உள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பணியாளர்களை அதிகமாக நீக்கும் பட்டியலில் கூகுள் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3வது லேஆஃப்பில் என்ட்ரி கொடுக்க உள்ளது. ஒவ்வொரு முறையும் சில நூறு பணியாளர்கள் வேலையை பறிகொடுத்து வருகின்றனர். குறிப்பாக கூகுள் பிளாட்பார்ம் மற்றும் டிவைஸ் யூனிட் சார்ந்த பணியாளர்கள் வேலையை இழக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் Voluntary Exit திட்டத்தை தொடங்கியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்து கொண்டால் இந்த மாதம் அடுத்தக்கட்ட லே-ஆப்பை தொடங்க உள்ளது. நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சரியாக பணியாற்றாதவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மெட்டா நிறுவனத்தை எடுத்து கொண்டால் கடந்த பிப்ரவரியில் மட்டும் சுமார் 3,600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உலகளவில் பணியாற்றும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும். நிறுவனத்தில் திறமையான மற்றும் சுறுசுறுப்பான நபர்களை பணியமர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி ஏற்னகவே தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்து இருந்த நிலையில் அதனை நோக்கி மெட்டா பயணிக்கிறது. இதுதவிர போனஸ் பிரச்சனையும் உள்ளது. போனஸ் வழங்குவதை தவிர்க்கும் வகையில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதேபோல் டிக்டாக் நிறுவனத்திலும் ஆட்கள் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டப்ளின் டிக்டாக் அலுவலகத்தில் 300 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவ்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை. இப்படி முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை தொடர்ந்து நீக்கி வருவது என்பது பிற ஐடி நிறுவன ஊழியர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+