ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது.. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் தாக்குதல் நடத்தினர். அப்போது பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை செய்து வருகிறார். ஒரு வீடியோவில் திருமாவளவனை ஒருமையில் பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
இந்த வீடியோவை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோபமடைந்து ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது, 'ஏர்போர்ட்' மூர்த்தியை விசிகவை சேர்ந்தவர்கள் 3 பேர் அடித்து தாக்கினர். ஒருவர் செருப்பால் அடித்தார். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்கினார்.
இரவோடு இரவாக கைது
அப்போது கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விசிகவினர் அளித்த புகாரின் பேரில் மெரினா போலீஸார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதன் காரணமாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்கோயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
எனினும், ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications