Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில வணிக கேஸ் சிலிண்டர் இருந்தா, 30 நாளுக்கு கோழிக்கறி பிரியாணி இலவசம்! ஓசூர் ஹோட்டல் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாலாபக்கமும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கவலையை தந்து கொண்டிருக்கிறது.. இத்தகைய நெருக்கடியான சூழலை சமாளிக்க ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அறிவித்துள்ள விநோதமான மற்றும் புத்திசாலித்தனமான சலுகை, தற்போது சோஷியல் மீடியாவின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி வெகுவாக குறைந்து விட்டது. தமிழகத்தில் வணிக சிலிண்டர்கள் மருத்துவமனைகள் போன்ற அவசியங்களுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது.. வீட்டு சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது..

Hosur Chicken Biryani Free Offer Gas Cylinder Promo Hotel Surprise Food Lovers Special Deal Limited Time Culinary Delight Tasty Meals Foodie Heaven Ooty Tourism Delicious Biryani Freebies Must Try Viral Offer Taste Sensation Hotel Promotion Gourmet Treat Biryani Lovers

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

வீட்டு சிலிண்டர் கிடைக்கும்போதும், வணிக சிலிண்டர் கிடைக்காமல் ஹோட்டல்கள் சிக்கலில் இருக்கின்றன; கள்ளச்சந்தையில் 6,000 ரூபாய் கொடுத்தும் சிலிண்டர் கிடைக்கவில்லையாம்..

இளைஞர்கள் மற்றும் தனியாக வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு, அரசு கள்ளச்சந்தை தடுப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது..

ஆனால் வணிக சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதால், பல கடைகள், பல ஹோட்டல்கள், மெஸ்கள் மூடப்பட்டுள்ளன... பல ஓட்டல்களில் விறகு, கரி, மின்சார அடுப்பு போன்ற மாற்று வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.. இதனால் உணவு விலை உயர்ந்து, டீ, சாப்பாடு, சிக்கன் ரைஸ் போன்றவை அதிக விலையில் விற்கப்படுகின்றன.

இந்த கேஸ் தட்டுப்பாடு திருவண்ணாமலை கோயிலிலும் எதிரொலித்துள்ளது.. அண்ணாமலையார் கோவிலில் லட்டு, முறுக்கு, எள்ளுவடை போன்ற பிரசாதங்கள் தற்போது விறகு அடுப்பில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.. கேஸ் இருந்தால் ஒரு லட்சம் லட்டு செய்ய முடியும்; ஆனால் இப்போது சுமார் 25 ஆயிரம் லட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.. ஊழியர்களும் பிரசாதங்களை தயார் செய்வதில் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஓசூர் ஓட்டல் சர்ப்ரைஸ்

இந்த சூழலில், கேஸ் சிலிண்டர் தந்தால் பிரியாணி ஒரு மாதத்துக்கு இலவசம் என்று நூதன அறிவிப்பு ஓசூரில் இருந்து வெளியாகி உள்ளது.. எரிவாயு தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இப்படியொரு அதிரடி திட்டத்தை அந்த ஓசூர் ஓட்டல் முன்னெடுத்துள்ளது.

"கஸ்டமர்கள் யாராவது தங்களிடம் உள்ள ஒரு கமர்ஷியல் சிலிண்டரை (Commercial Gas Cylinder) எங்களுக்கு தந்தால், அதற்கு பதிலாக அடுத்த ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சிலிண்டரின் விலைக்கு நிகரான அல்லது அதற்கும் மேலான மதிப்பிலான உணவை ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து வழங்க அந்த உணவகம் முன்வந்துள்ளது.

கோழிக்கறி பிரியாணி இலவசம்

இப்படியொரு அறிவிப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் வீடுகளில் சமைக்க சிரமப்படும் நபர்களுக்கும், வணிக ரீதியாகச் சிலிண்டரை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, தங்களது வணிக சிலிண்டர்களை 2 கஸ்டமர்கள் இந்த ஓட்டலில் ஒப்படைத்துவிட்டு, இந்த "பிரியாணி சந்தா" திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தினமும் இந்த ஓட்டலுக்கு வந்து தங்களுக்குரிய சிக்கன் பிரியாணியை இலவசமாக சாப்பிட்டு செல்கிறார்களாம்.

கையில சிலிண்டர் இருக்கா

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகவும், ஓட்டலை நடத்துவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இந்த முடிவை எடுத்ததாக ஹோட்டல் ஓனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசு கொடுத்து சிலிண்டர் வாங்க காத்திருப்பதை விட, மக்களிடம் இருக்கும் உபரி சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவை வழங்குவது 2 தரப்புக்கும் லாபகரமாக இருக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்களாம்.. சிலிண்டர் விநியோகம் சீராகி, சந்தையில் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த விநோதமான சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும் ஓட்டர் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், கேஸ் சிலிண்டர் விலையை, ஒரு மாத காலத்திற்கான சிக்கன் பிரியாணியின் விலையுடன் கணக்கிட்டுப் பார்த்தால், இது கஸ்டமர்களுக்கு லாபகரமான ஒன்றாகவே தெரிகிறது. அதுவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அவதிப்படும் இந்த நேரத்தில், ஓசூர் ஓட்டலின் இந்த செயல்திறன் மிக்க மற்றும் வித்தியாசமான விளம்பர யுக்தி மற்ற வணிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+