நடு ராத்திரி.. ஓடும் பஸ்சில்.. பின் சீட் வழியாக கையை விட்டு.. கண்டக்டரின் அட்டகாசம்.. பெண் அலறல்
ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை தந்துள்ளார்
Recommended Video
சென்னை: நடுராத்திரி.. பஸ்ஸில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணின் மார்பகத்தை பிடித்து பாலியல் தொல்லை தந்துள்ளார் கண்டக்டர் ஒருவர்! இதையடுத்து, அந்த அரசு பஸ் கண்டக்டரை, சம்பந்தப்பட்ட பெண் பளார் என ஒரு அறைவிட்டு, போலீஸ் ஸ்டேஷனிலேயே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார்!
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. 28 வயதாகிறது. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக இருக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் ஏறி உள்ளார்.
நடு இரவில் நன்றாக அசந்து தூங்கிவிட்டார். அப்போது யாரோ தன்னை தொடுவது போல உணர்வது, திடீரென தமிழ்செல்வி கண்விழித்து கொண்டார்.

கண்டக்டர் ராஜு
அப்போது, கண்டக்டர் ராஜூ, பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், தமிழ்செல்வியின் மார்பை பிடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வி, கண்டக்டரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் மிகப்பெரிய பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

புகார்
பின்னர், கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய பிறகும், தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராஜு, "உனக்கு வேணும்னா ஸ்டேஷனில் போய் புகார் தந்துக்கோ" என்று அலட்சியமாக பதில் சொல்லி உள்ளார்.

துணிச்சல்
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜு மீது மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடமும் தமிழ்செல்வி பேசினார். அப்போது, "இப்படி பாலியல் தொல்லை அடிக்கடி நிறைய இடத்துல நடக்குது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக வந்து ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும்" என்றார்.

நடவடிக்கை
ராமநாதபுரத்தில் இதே போன்று ஓடும் பஸ்ஸில் பெண்களிடம் ராஜு ஏற்கனவே தவறாக நடந்து கொண்டு, அதற்காக சஸ்பெண்டும் செய்யப்பட்டாராம். அந்த சஸ்பெண்ட் முடிந்து இப்போதுதான் வேலைக்கு திரும்பி இருக்கிறார் ராஜு. திரும்பவும் அடுத்த புகார் கிளம்பி உள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications