Cyclone Nivar: 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்
சென்னை: சென்னையிலிருந்து 7 மாவட்டங்கள் வழியாக பிற மாவட்டங்களுக்கும் செல்லும் அரசு பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆலோசனை
இந்த நிலையில் நிவர் புயல் குறித்து வருவாய் துறையினர், தலைமை செயலாளர், முதல்வர் என ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்கள்
அது போல் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களையும் கூரை வீடுகள், மண் வீடுகள் உள்பட பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பேருந்து சேவை
இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் அறிவித்தார். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது.

இன்னம் பிற மாவட்டங்கள்
அது போல் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஆம்னி சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications